வால்பாறை: வால்பாறையிலுள்ள கோவில்களில், புரட்டாசி மாத கார்த்திகை வழிபாடு நடந்தது.வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், புரட்டாசி மாதம் சங்கடஹர சதுர்த்தி பூஜையையொட்டி விநாயகருக்கு, நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு சிறப்பு அபிேஷக பூஜையும் நடந்தது. தொடர்ந்து, மாலை, 6:30 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு அலங்காரபூஜையும் நடைபெற்றது.இரவு, 7:00 மணிக்கு கார்த்திகை பூஜையையொட்டி முருகனுக்கு அபிேஷக பூஜையும், 8:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு, விநாயகர் மற்றும் முருகனை வழிபட்டனர். பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.