Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுப்ரமணியர் கோவிலில் கார்த்திகை ... பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் பெரியாண்டிக்குழி பாலமுருகன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில்களில் கல்லிலே இசை வண்ணம்
எழுத்தின் அளவு:
கோயில்களில் கல்லிலே இசை வண்ணம்

பதிவு செய்த நாள்

07 அக்
2020
09:10

கல்லினை குடைந்து பல கலை வண்ணங்களை கண்டவர்கள் தமிழர்கள், கல்லினால் பல அரிய சிற்பங்களை, கோயில்களை கட்டிய பெருமை இந்தியா முழுவதும் உள்ள கலைஞர்களுக்கு பங்கு உள்ளது என்றாலும், தென்னிந்தியா கல் சிற்பங்கள், கல்துாண்கள், கட்டிடங்களில் முன்னோடியாக திகழ்கிறது. பாறை என்று குறிக்கப்படும் கல்லில் தமது மதிநுட்பத்தால் பல்வேறு கலைத்திறன்மிக்க சிற்பங்களை உருவாக்குவதில் தமிழர்கள் சிறந்து விளங்கினர். குறிப்பாக இசைத் துாண்கள் மிக அரியதாக கருதப்படுகிறது.

இசைத்துாண்கள்: பொதுவாக சிற்பிகள் மனதில் உதித்த சிந்தனையை சிற்பமாக ஆக்குபவர். உரிய பணியிடத்தில் நியமிக்கப்பட்ட பணிகளை செய்வது சிற்பிகளின் கலைத்திறமைகளை தமிழ்நாடு முழுவதும் உள்ள திருக்கோயில்களில் காணமுடியும். இசைத்துாண்கள் கட்டிடக்கலையின் ஒரு அம்சமாகவும், அமைவதால் செய்வதற்கும், கேட்பதற்கும் மிக நுட்ப அறிவு இதற்கு பயன்படுகிறது. தமிழ்நாட்டில் பாண்டிய நாட்டை சேர்ந்த ஊர்களில் இசைத்துாண்கள் அதிகமாக காணப்படுகின்றன. பெரும்பாலான இசைத்துாண்கள் ஒரே கல்லிலே வடிவமைக்கப்பட்டிருக்கும். பருமன் குறைவான துாண்கள் நான்கு, ஐந்து பருமன் அதிகம் உள்ள ஒரு துாணை சுற்றியுள்ளதாக இவை அமைக்கப்பட்டிருப்பதை நாம் இன்று காண முடியும். தென்னிந்தியாவில் பல்வேறு கோயில்களில் இசைத்துாண்களை ஒட்டிய நாட்டிய அரங்குகளும் உள்ளன. குறிப்பாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில், கூடலழகர் கோயில், அழகர்கோயில், ஆழ்வார் திருநகரி, நெல்லையப்பர்கோயில், தாடிக்கொம்பு, சுசீந்தரம், ஹம்பி, ஆவுடையார் கோயில் போன்ற இடங்களில் இன்றும் இசைத்துாண்கள் உள்ளன.

கோயில் கட்டடக்கலை மரபு: கட்டடக்கலையின் வாயிலாக ஒரு நாட்டின் வரலாறு, பண்பாடு ஆகியவற்றின் சிறப்பை அறியமுடியும். தமிழக கட்டடக்கலையில் சிறப்பிடம் பெறுவது திருக்கோயில் கட்டடங்களாகும். பண்பாட்டுச் சின்னமாக விளங்கும் கோயில் கட்டடக்கலையின் துாண்கள் என்பன தொன்மையான கலை வரலாற்றுச் சிறப்புடன் திகழ்கின்ற பகுதியாகும்.திராவிடக்கலை எனப் பேசப்படும் தமிழகக் கோயில் துாண்களின் அமைப்பு தனித்துவம் உடையது எனக் கருதலாம். திராவிடக் கலையில் 16ம் நுாற்றாண்டில் போற்றுதற்குரிய இரண்டு வளர்ச்சி நிலைகள் ஏற்பட்டன. ஒன்று வெளியமைப்பிலுள்ள கோபுரம் மற்றொன்று உட்பகுதியில் இடம் பெற்ற துாண்களாகும்.தமிழகக் கட்டடக்கலை அமைப்பில் போற்றுதலுக்குரிய ஒருவகைத் தொழில்நுட்பம் துாண் நிர்மாணக் கலையாகும். இதன் அமைப்பும் கலைநுட்பமும் நாயக்கர்களுடைய காலத்தில் சிறப்பு பெற்றன. அத்தகைய கலைத்திறனுடைய படைப்பில் ஒன்று இசைத்துாண்களாகும்.

மரபில் தோன்றியவை: தமிழகத் துாண்களின் அலங்காரமும் வகைகளும் பொதுவாக மரபில் தோன்றியவையாகும். சங்க காலத்தில் மரத்தால் அமைக்கப்பட்ட துாண்கள் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன. துாண்களில் காணப்படும் சிற்பங்கள், நடனம், இசை, வாத்தியம், அலங்கார சிற்பம், தெய்வத் திருமேனி சிற்பம், ஆண், பெண் சிற்பமென அனைத்தும் பலதரப்பட்ட சைவ, வைணவ கோயில்களில் காண முடிகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பல இடங்களில் இசைத் துாண்கள் உள்ளன. வடக்கு கோபுர வாசல் இறங்கி செல்லும் இரு புறங்களில் இசைத்துாண்களில் ஸ ரி க ம ப என்ற ஐந்து ஸ்வரங்கள் கேட்கும். கோயிலுக்குள்ளே ஆயிரங்கால் மண்டபத்தில் மிக அழகுற வடிவமைக்கப்பட்டுள்ள இசைத்துாண்கள் ஏழு ஸ்வரங்களையும் சொல்லும். சுவாமி சன்னதியில் கொடி மரம் உள்ள மண்டபத்தில் கிழக்கு நோக்கிய சிற்பத்தின் கீழே ஐந்து சிறிய துாண்கள் இசையை பேசுகின்றன.மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தாயார் சன்னதியின் மண்டப முன்பகுதியில் இருபுறமும் இசைத்துாண்கள் ஸ ரி க ம என்ற நான்கு ஸ்வரங்களை சொல்லுகிறது. அழகர் கோவில் துாண்கள் ஒத்திசை போன்ற இசையை எழுப்பக் கூடியன. நடுவில் ஒரு துாணும் அதைச் சுற்றி மூன்று அடிகள் உயரமான துாண்களும் உள்ளன.

48 இசைத்துாண்கள்: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் சுவாமி சன்னிதியில் உள்ள துாண்கள் மிக அருமையாக இசை எழுப்பக்கூடியன. நடுவில் பெரிய துாணும் அதைச் சுற்றிலும் 48 சிறிய இசைத்துாண்களை தட்டினால் இனிய இசையை கேட்க முடிகிறது.பாண்டியர் கால கோயிலான ஆழ்வார் திருநகரியில், இரண்டு வகையான இசைத்துாண்கள் உள்ளன. ஒன்று தட்டும் போது ஒலியெழுப்பக்கூடியது. (இசைத்துாண்களை தட்டுவதற்கு மரத்தில் ஆன உருண்டை வடிவ சுத்தி போன்ற அமைப்பில் உள்ள கருவி தேவை), மற்றொன்று, துளை இசைத்துாண்கள். மிக நுட்பமாக கையாள வேண்டியவை. இரண்டு துளைகள் உள்ள இத்துாணில் வாய் வைத்து ஊதினால் இசை பிறக்கிறது.

திருவாரூரில் உள்ளது போல இங்கேயும் “கல் நாதசுரமும்” உள்ளது. அபூர்வமான வேலைப்பாடுகள் நிறைந்த ஆழ்வார் திருநகரியை போலவே சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலிலும் இசைத் துாண்கள் காணக்கிடைக்கின்றன. குணசேகர மண்டபத்தில் வடக்கு பக்கம் 24 சிறிய துாண்களும், தெற்கு பக்கத்தில் 33 சிறிய இசைத்துாண்களும் உள்ளன.

இளைய தலைமுறைக்கு: நாம் நேரில் சென்று பார்த்து உணர்ந்து இது போன்ற கலை வடிவங்களை இளைய தலைமுறையினருக்கு எடுத்து சொல்ல வேண்டும். பள்ளியில் சிறிய சுற்றுலா ஏற்பாடு செய்து இசைத்துாண்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.தமிழ்நாட்டில் 30 ஆண்டுகளுக்கு முன்னர், திருத்தலங்களுக்கு சுற்றுலா செல்வது என்பது முக்கிய அங்கமாகவே இருந்தது. தற்போது குறைந்து விட்டது. திருக்கோயில் தல யாத்திரை சென்றால் பல அரிய விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும். குறிப்பாக சிற்பம், ஓவியம், இசை பற்றிய அறிவு கிடைக்கும்.

கும்பகோணம் தாராசுரம் கோயில் ஒரு சிற்ப கலைக்களஞ்சியமாக உள்ள இடம். கோயிலின் நுழைவு வாசலில் சிறு மண்டபம் போன்ற வடிவத்தில் இசை படிக்கட்டுகள் உள்ளன. இதில் ஒலி எழுப்பினால் சங்கராபரணம் எனும் ராகத்தின் ஸ்வரஸ்தானங்கள் பேசுகின்றன.சுமார் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹம்பி என்ற ஊர் கர்நாடகாவில் உள்ளது. முழுவதும் செந்நிற பாறைகள் நிறைந்த இவ்விடத்தில் விட்டல கோயில் ரங்க மண்டபத்தில் 56 துாண்களில் இசை பிறக்கிறது. இப்படி தென்னிந்தியா முழுவதும் சிற்பக்கலைக்கும் கட்டிடக் கலைக்கும் எடுத்துக் காட்டாய் திகழ்கின்றது. மனம் பண்பட கலைகளே உறுதுணை. கண் வழி சிற்பங்களை கண்டு ரசித்து செவி வழி இசையை கேட்கும் நம் தமிழ் மண்ணின் மரபுகளை பாதுகாப்போம்.- முனைவர் தி.சுரேஷ்சிவன் செம்மொழி இசைத்தமிழ் அறிஞர் மதுரை. 94439 30540

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நடைபெற்று வரும் கார்த்திகை பிரம்மோற்சவத்தில் இன்று ... மேலும்
 
temple news
காரமடை; காரமடை அடுத்துள்ள மருதூர் ஆஞ்சநேயர் கோவிலில் கார்த்திகை மாத மூல நட்சத்திரத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியதால் 2 கல்வெட்டுகள் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் மற்றும் ஆதித் திருத்தளிநாதர் கோயிலில்களில் ... மேலும்
 
temple news
திருப்பூர்; திருப்பூர், முதலிபாளையம், சிட்கோ அருகில் நடந்த மங்கல வேல் வழிபாட்டில் ஏராளமான பெண்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar