ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், தட்டுக்காணிக்கை உண்டியல்களில், 9.28 லட்சம் ரூபாய் காணிக்கை வசூலானது.ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்ட பின், நேற்று இரண்டாவது முறையாக தட்டு காணிக்கை உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.கோவில் உதவி ஆணையர் ஆனந்த் தலைமை வகித்தார், ஈச்சனாரி விநாயகர் கோவில் உதவி ஆணையர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார். கோவில் மண்டபத்தில், காணிக்கை எண்ணும் பக்தர்கள் சமூக விலகலை பின்பற்றி அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டது. மொத்தம், ஒன்பது லட்சத்து, 28 ஆயிரத்து, 738 ரூபாய் காணிக்கை இருந்தது.