Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சூரசம்ஹாரம் : ராமேஸ்வரத்தில் சூரனை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலைக்கேணியில் சூரசம்ஹாரம்- சூரனை வதம் செய்தார் சுப்பிரமணிய சுவாமி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருமலைக்கேணியில் சூரசம்ஹாரம்- சூரனை வதம் செய்தார் சுப்பிரமணிய சுவாமி

பதிவு செய்த நாள்

15 நவ
2026
07:11

நத்தம்: நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு சூரசம்ஹாரம் விழா நடந்தது. இதையொட்டி கடந்த நவ.10 கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில் ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.தொடர்ந்து சிவபூஜை திருக்காட்சி, சிவ உபதேச திருக்கோலம், அருணகிரியாருக்கு நடனக்காட்சி அருளுதல், முருகப்பெருமான் வேல் வாங்கும் நிகழ்ச்சிகள் நடந்தது.பின்னர் மதியம் கோவில் வளாகத்தில் எழுந்தருளிய முருகப்பெருமானுக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரம் தீபாராதனைகள் நடந்தது.தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் திருக்காட்சி அங்குள்ள கிரிவல பாதையில் இன்று மாலை நடந்தது.இதில் முருகப்பெருமான் ஆட்டுக்கிடா வாகனத்தில் எழுந்தருளி சிங்கமுகாசூரன்,கஜமுகாசூரன், தாரகாசூரனை தனது வேலால் வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் இறுதியில் சூரபத்மனை வெற்றிவேலை கொண்டு மாமரமாக நின்ற சூரனை வேல் கொண்டு வதம் செய்து சூரசம்ஹாரத்தை நிகழ்த்தினார்.பின்னர் தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.இதில் திண்டுக்கல், நத்தம், செந்துறை, வடமதுரை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் அழகுலிங்கம், இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் பாலசரவணன் உள்னிட்ட விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி:  வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற லட்சக்கணக்காக பக்தர்களின் கோஷம் விண்ணதிர, ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழாவில் சூரசம்ஹார நிகழ்வில் பங்கேற்க வந்த பக்தர்கள் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் முருகன் கடவுள் சூரனை வதம் செய்து சூரசம்ஹாரம் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்காலில் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை ... மேலும்
 
temple news
காரைக்குடி: குன்றக்குடியில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்காரம்  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar