மயிலம் : மயிலம் ஸ்ரீ வள்ளி தெய்வானை சுப்பிரமணியர் சுவாமி திருக்கோவிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. நேற்று இரவு 9:45 மணிக்கு குரு பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசித்தார். இதனை முன்னிட்டு மயிலம் வள்ளி தெய்வானை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாலை 5:00 மணிக்கு சுவாமிக்கு பால், சந்தனம், தேன், இளநீர், பன்னீர் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.பின்னர் கோவில் வளா கத்தில் நவகிரக சன்னதியில் உள்ள ஸ்ரீ குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகமும் வழிபாடும் நடந்தது. இரவு 9 : 45 மணிக்கு குரு பகவானுக்கு மகா தீபாராதனை நடந்தது. இதில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் இருபதாம் பட்ட சுவாமிகள் சிறப்பாக செய்திருந்தார்.