சோழவந்தான் : சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன் மூலநாத சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா நவ 15 துவங்கியது.வள்ளி, தெய்வசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தன. நவ., 20 மாலை 4:00 மணிக்கு முருகன் வேல் வாங்கும் நிகழ்ச்சி, மாலை 5:00 மணிக்கு கோயில் முன் சூரசம்ஹாரம் நடக்கிறது.நவ., 21 காலை அன்னப் பாவாடை தரிசனம், மாலை திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம், பிரதோஷ கமிட்டி நிர்வாகிகள் செய்துள்ளனர்.