Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னிகா பரமேஸ்வரி பவித்திர பட்டு ... இன்று திரைலோக்ய கவுரி விரதம்; அம்பாளை வழிபட நல்லதே நடக்கும்! இன்று திரைலோக்ய கவுரி விரதம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அஷ்டமி சப்பர வீதி உலா: படியளந்தார் பரமசிவம்
எழுத்தின் அளவு:
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அஷ்டமி சப்பர வீதி உலா: படியளந்தார் பரமசிவம்

பதிவு செய்த நாள்

12 ஜன
2026
10:01

மதுரை : அனைத்து ஜீவராசிகளுக்கும் படியளக்கும் விதமாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அஷ்டமி சப்பர வீதி உலா நடந்தது. விழாவில் ரிஷப வாகனத்தில் அம்மன். பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் அருள்பாலித்தார்.


மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, சுவாமியும் பிரியாவிடை அம்மனும் ஒரு சப்பரத்திலும், மீனாட்சி அம்மன் தனி சப்பரத்திலும் மதுரை நகர் வீதிகளின் வழியாக அனைத்து உயிர்களுக்கும் படி அளக்கும் உலா நடைபெற்றது. மதுரையில் அனைத்து உயிர்களுக்கும் படியளக்க அஷ்டமி சப்பரத்தில் சுவாமியும், அம்மனும் உலா வந்தனர். ஒரு சமயம் உலகத்தில் அனைத்து உயிர்களுக்கும் படியளக்க சிவபெருமான் புறப்பட்டார். அவரை சோதிக்க நினைத்த அம்மன், பாத்திரத்தில் எறும்பு ஒன்றை அடைத்து வைத்தார். எல்லா உயிர்களுக்கும் படி அளந்த திருப்தியில் திரும்பிய சிவபெருமானிடம், ஒரு உயிருக்கு மட்டும் நீங்கள் படியளக்கவில்லை, என்றார் அம்மன். பாத்திரத்தை திறந்து பார்த்தபோது, அந்த எறும்புக்கு அருகிலும் அரிசி இருந்தது. இதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும், மார்கழி தேய்பிறை அஷ்டமி நாளில் சுவாமியும் பிரியாவிடை அம்மனும் ஒரு சப்பரத்திலும், மீனாட்சி அம்மன் தனி சப்பரத்திலும் மதுரை நகர் வீதிகளின் வழியாக அனைத்து உயிர்களுக்கும் படி அளக்கும் வகையில் உலா வருவது வழக்கம்.


அதன்படி நேற்று (11ம் தேதி ) அதிகாலை கோயிலில் இருந்து இருவரும் புறப்பாடாகி, கீழமாசிவீதி வந்தனர். அங்கு இரு சப்பரங்களில், சிவபெருமானும், அம்மனும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கீழவெளிவீதி, தெற்கு வெளி வீதி, மேலவெளிவீதி வடக்கு வெளிவீதி என நான்கு வெளி வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். வரும் வழியில், ஜீவராசிகளுக்கு படியளக்க, பக்தர்கள் ரோட்டின் இருபுறமும் அரிசியை தூவியும், அதை எடுத்தும் வழிபட்டனர். திருவிழாவில் எடுக்கப்பட்ட அரிசியை வீட்டில் வைத்து வேண்டிக்கொண்டால், அள்ள அள்ள அண்ணம் கிடைத்து, பசி எனும் நோய் ஒழியும் என்பது நம்பிக்கை. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
அவிநாசி; ராமியம்பாளையம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சென்றாய பெருமாள் கோவிலில் மஹா கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
சின்னாளபட்டி; மேட்டுப்பட்டியில் ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. காப்பு ... மேலும்
 
temple news
அவிநாசி; வேலாயுதம்பாளையம் ஊராட்சி காசி கவுண்டன் புதூர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜப்பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar