சூலூர் பெருமாள் கோவில்களில் கூடார வல்லி உற்சவ விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜன 2026 11:01
சூலூர்; சூலூர் வட்டார கோவில்களில் கூடார வல்லி உற்சவம் கோலாகலமாக நடந்தது.
சூலூர் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஶ்ரீ வேங்கட நாத பெருமாள் கோவிலில், நேற்று முன் தினம் மாலை, 5:00 மணிக்கு, திருக்கல்யாண உற்சவம் துவங்கியது. முன்னதாக, விநாயகர் வழிபாட்டுடன் பூஜைகள் துவங்கின. 8:00 மணிக்கு திருமாங்கல தாரணம் நடந்தது. பக்தர்கள் ஏராளமான சீர்வரிசைகளை எடுத்து வந்து பெருமானை வழிபட்டனர். நேற்று காலை கூடாரை வெல்லும் சீர் எனும் கூடார வல்லி உற்சவம் நடந்தது. 30 பாசுரங்கள் பாடி, 30 மாலைகள் அணிவித்து வழிபாடுகள் நடந்தன. பக்தர்கள் பங்கேற்று பஜனை பாடல்களை பாடி மனமுருகி வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு திருமாங்கல்ய சரடு, வளையல்கள், பூக்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன. இதேபோல், சூலூர் வட்டார பெருமாள் கோவில்கள் அனைத்திலும் கடார வல்லி உற்சவ விழா பய பக்தியுடன் நடந்தது.