சிவபெருமானின் இளைய மகனான முருகனை ‘குமரன்’ (இளைஞன்) என கேள்விப்பட்டிருக்கிறோம். இப்பெருமானுக்கு ‘குறிஞ்சிக்கிழவன்’, ‘தமிழ்க்கிழவன்’ என்ற பெயர்கள் உண்டு. ‘கிழவன்’ என்றால் ‘உரிமை கொண்டவன் அல்லது தலைவன்’ என்று பொருள். தமிழ் மொழிக்கு உரியவன் என்பதால் தமிழ்க்கிழவன் என்றும், மலைக்கு உரிய தெய்வமாக விளங்குவதால் குறிஞ்சிக்கிழவன் என்றும் பெயர் பெற்றார். எனவே சங்ககாலம் முதல் இக்காலம் வரை முருகனே நமக்கு தலைவனாக விளங்குகிறான்.