Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருணாசலேஸ்வரர் கோவிலில் ... பாலமுருகன் கோவிலில் கிருத்திகை சிறப்பு பூஜை பாலமுருகன் கோவிலில் கிருத்திகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதியில் மஹா தீபோற்ஸவம்: விஜயேந்திரர் துவக்கி வைத்தார்
எழுத்தின் அளவு:
திருப்பதியில் மஹா தீபோற்ஸவம்: விஜயேந்திரர் துவக்கி வைத்தார்

பதிவு செய்த நாள்

01 டிச
2020
10:12

திருப்பதி: திருமலை திருப்பதி கோவில் நிர்வாகத்தின் சார்பில் கார்த்திகை மாத மஹா தீபோற்ஸவ விழா நேற்று மாலை வெகு விமரிசையாக நடைபெற்றது. காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்று விழாவினை துவக்கி வைத்து ஆசியுரை வழங்கினார். திருப்பதியில் தேவஸ்தான நிர்வாக கட்டடத்தின் பின்புறத்தில் அமைந்துள்ள மைதானம் இந்த நிகழ்ச்சிக்காக சிறப்பாக தயார் செய்யப்பட்டு இருந்தது. பல இடங்களில் மலர்களால் ரங்கோலி ஒவியம் வரையப்பட்டு அதன் மையத்தில் விளக்குகள் ஏற்றப்பட்டன. மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த மேடையில் மகாலட்சுமி வைர வைடூரிய நகைகளுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தபடி வீற்றிருந்தார்.

மைதானத்தில் 500க்கும் அதிகமான பெண்கள் சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் நெய் விளக்கு ஏற்றி மைதானத்தை ஒளிரச்செய்தனர். விழாவின் துவக்கத்தில் வேத விற்பன்னர்களால் வேத மந்திரங்கள் முழங்கப்பட்டன. விழாவிற்கு தலைமை தாங்கிய காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தீபத்தின்பல்வேறு சிறப்புகளை பற்றி பேசியதுடன் தீபமேற்றுவதால் கிடைக்கும் பலன்களையும் எடுத்துரைத்தார். பின்னர் காஞ்சி பெரியவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் விழாவில் பங்கேற்ற அபூர்வமான புகைப்படங்களையும் காமாட்சி விளக்கையும் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பிரமுகர்களுக்கு வழங்கி ஆசீர்வாதித்தார். நிகழ்ச்சியின் நிறைவாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் இன்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் வடக்குநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டு சித்திரை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபா பிறந்தநாள் விழா மற்றும் ராம நவமி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் பணம் மற்றும் நகை என காணிக்கையை கொட்டி ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் ஏகாதசியை முன்னிட்டு கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar