* பயம் வேதனை அளிக்கும். அன்பு பயத்தை போக்கும். * பகைமை சண்டைகளை எழுப்பி விடும். அன்பு குற்றத்தை மன்னிக்கும். * பேச்சு அதிகமானால் நற்செயலில் ஈடுபட முடியாது. * தீயவன் ஆணவத்தால் எளியவர்களை துன்புறுத்துவான். முடிவில் சிக்கலுக்கு ஆளாவான். * கற்றுக் கொண்ட நல்ல விஷயங்களில் நிலைத்து நிற்பீராக. * நேர்மையின் பாதையில் நடப்பவன் புகழ் அடைவான். * கணவருக்கு அவமானத்தை உண்டாக்குபவள் எலும்புருக்கி நோய் போன்றவள். * கருணை உள்ளவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அவர்கள் கருணை பெறுவர். * பேசுவதில் மென்மை காட்டுங்கள். கோபம் கொள்வதில் தாமதமாக இருங்கள். * நீதியின் பாதையில் நன்மை மட்டுமே உண்டு. * பண ஆசை தான் சகல தீமைகளுக்கும் மூலவேர். * துன்மார்க்கன், மூர்க்கன், மோகம் கொண்டவனை ஆண்டவர் வெறுக்கிறார். * நீதிமான்கள் மரணத்திலும் நம்பிக்கையை இழப்பதில்லை. * தாழ்த்தப்பட்டவர்களின் கூக்குரலை ஆண்டவர் மறப்பதில்லை. பைபிள்