பதிவு செய்த நாள்
30
மே
2012
11:05
ஈரோடு: ஈரோடு மாவட்டம், கொடுமுடி அடுத்த கொத்தளம் கிராமத்தில் உள்ள அமிர்தவல்லி அம்பிகா சமேத ஸ்ரீநாகேஸ்வர சுவாமி கோவில், ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் மற்றும் ஸ்ரீமகா மாரியம்மன் கோவில் ஆகியவற்றுக்கு, மே, 31ம் தேதி, வியாழக்கிழமை காலை, 7.30 முதல், 8.30 மணிக்குள், மஹா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.முன்னதாக, மே, 28ம் தேதி கோவிலில், விக்னேஷ்வர பூஜையும், நேற்று, அக்னி ஷங்கிரகணம் மற்றும் கொடுமுடி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல் மற்றும் முதல் யாகசாலை பூஜை மாலையில் துவங்கியது. இன்று, காலை, 9 மணிக்கு இரண்டாம் யாக சாலை பூஜையும், மாலை, 5 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது.நாளை, அதிகாலை, நான்காம் கால யாகசாலை பூஜையும், பெங்களுரூ வேத அகம சமஸ்குத மஹா பாடசாலை முதல்வர் சுந்தரமூர்த்தி தலைமையில் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்காக, 10 ஆயிரம் சதுரடியில், 37 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் யாக சாலை பூஜைகளை நடத்த உள்ளனர்.வாழும் கலை ஸ்ரீ ரவிசங்கர் குருஜியின் பாடசாலை மாணவர்கள் பூஜைகளை நடத்தவுள்ளனர். ஸ்ரீஅருண் மாதவனின், பக்தி சொற்பொழி நடக்க உள்ளது.அமைச்சர்கள் செங்கோட்டையன், ராமலிங்கம், ஆனந்தன் மற்றும் அறநிலைய துறை செயலார் ராஜாராம், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், அறநிலையத்துறை உதவி ஆணையர் தனபால், செயல் அலுவலர் அருள்குமார், யு.ஆர்.சி., நிறுவன இயக்குனர் பழனிச்சாமி மற்றும் பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஸ்தபதி சண்முகம், குப்புசாமி, ராமசாமி உள்ளிட்ட பலர் செய்து வருகின்றனர்.