பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்சவத்தின் பத்தாம் நாளான நேற்று மாலை 5:00 மணிக்கு பெருமாள் மோகினி அவதாரத்தில் அருள்பாலித்தார்.
இக்கோயிலில் பகல்பத்து உற்சவம் டிச., 15 அன்று துவங்கியது. தினமும் காலை 9:00 மணிக்கு ஏகாதசி மண்டபம் எழுந்தருளிய பெருமாள் முன், அர்ச்சகர்கள் பன்னிரண்டு ஆழ்வார்களின் பாசுரங்களை தினமும் வாசித்தனர். தொடர்ந்து பத்தாம் நாளான நேற்று மாலை 5:00 மணிக்கு மோகினி அவதாரத்தில் வீதி வலம் வந்த பெருமாள், 6:00 மணிக்கு திருக்கோயிலை அடைந்தார். பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டு நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை 5:00 மணிக்கு பெருமாள் சர்வ அலங்காரத்துடன் பரமபதவாசல் வழியாக வரவுள்ளார்.