Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மிதுனம்: ஆங்கில புத்தாண்டு பலன் 2021 சிம்மம்: ஆங்கில புத்தாண்டு பலன் 2021 சிம்மம்: ஆங்கில புத்தாண்டு பலன் 2021
முதல் பக்கம் » ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2021
கடகம்: ஆங்கில புத்தாண்டு பலன் 2021
எழுத்தின் அளவு:
கடகம்: ஆங்கில புத்தாண்டு பலன் 2021

பதிவு செய்த நாள்

01 ஜன
2021
04:01

புனர்பூசம் 4ம் பாதம் : சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நேர்மையால் பெயரும் புகழும் சேரும். சுபநிகழ்ச்சி நடைபெறும். கடன் பிரச்னை தீரும். சொத்து சேர்க்கையில் ஈடுபடுவீர்கள். வங்கி நிதியுதவியால் வீடு கட்ட வாய்ப்புண்டு. உறவினரால் உதவி கிடைக்கும். உயர்கல்விக்காக  வெளிநாடு செல்வீர்கள். பெண்களுக்கு குடும்ப பொறுப்பு கூடும். நெருங்கிய நண்பர் எதிரியாக மாறலாம். உடல்நிலை சீராக இருக்கும். கவனக்குறைவால் அடிபட வாய்ப்புண்டு. சிறுதொழில் முதலீட்டில் லாபம் காண்பீ்ர்கள். பணியாளர்கள் பதவி உயர்வு காண்பர். வியாபாரிகள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வளர்ச்சி தரும் ஆண்டாக அமையும்.


பூசம்:  திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். நிதிநிலை நன்றாக இருக்கும். கடன் பிரச்னை முடிவிற்கு வரும். செலவு குறையும். நெருங்கிய நபர் ஒருவர் மூலம் பண விஷயத்தில் ஏமாற்றப்படலாம். எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். பிள்ளைகளால் பெருமை காண்பீர்கள். மாணவர்களின் மனப்பாடத்திறன் உயரும். பெண்கள் குடும்பத்தினரின் குறிப்பறிந்து பேசுவது நல்லது. மூட்டு வலி, உடல் அசதியால் சிரமப்படலாம். பணியாளர்கள் உழைப்பிற்கேற்ப பலனடைவர். சுயதொழில் செய்வோர் விடாமுயற்சியால் வளர்ச்சி காண்பர். மனமும் உடலும் சுறுசுறுப்புடன் இயங்கும்.

ஆயில்யம்: சுயமுயற்சியும் தனித்திறமையும் வெற்றிக்குத் துணையிருக்கும். செயலில் இருந்த தடுமாற்றம் காணாமல் போகும். . கடன் பிரச்னை முடிவிற்கு வரும். சேமிப்பு கூடும். புதிய சொத்து சேரும். குடும்பத்தில் பொறுப்பு கூடும். நண்பர் ஒருவருக்கு பண உதவி செய்யப்போய் வம்பில் சிக்க வாய்ப்புண்டு. மாணவர்கள் ஆர்வமுடன் படிப்பர். பெண்கள் கவனமுடன் பேச வேண்டியது அவசியம். டென்ஷன் காரணமாக பிரச்னைக்கு ஆளாகலாம். பணியாளர்கள் ஜூன் மாதத்தில் பதவி உயர்வு பெறுவர்.  சுயதொழில் செய்வோர் அமோக லாபம் காண்பர். முன்னேற்றம் தரும் ஆண்டு இது.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar