Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரிஷபம்: ஆங்கில புத்தாண்டு பலன் 2021 கடகம்: ஆங்கில புத்தாண்டு பலன் 2021 கடகம்: ஆங்கில புத்தாண்டு பலன் 2021
முதல் பக்கம் » ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2021
மிதுனம்: ஆங்கில புத்தாண்டு பலன் 2021
எழுத்தின் அளவு:
மிதுனம்: ஆங்கில புத்தாண்டு பலன் 2021

பதிவு செய்த நாள்

01 ஜன
2021
04:01

மிருகசீரிடம் 3, 4ம் பாதம் : சோதனையை சந்தித்தாலும் தைரியமுடன் செயல்படுவீர்கள். பேச்சு, செயலில் நிதானம் தேவை. பிரச்னை தீர சம்பந்தப்பட்டவருடன்  பேசி தீர்வு காணுங்கள். இடைத்தரகர்களை தவிர்ப்பது நல்லது. செலவு கூடும். மறதியால் பொருளிழப்பு உண்டாகலாம். குடும்பத்தாருடன் கருத்து வேறுபாடு தோன்றி மறையும். மாணவர்கள் மனதை ஒருமுகப்படுத்தி படிப்பது அவசியம். பெண்கள் அமைதி காப்பதால் மட்டுமே நினைத்ததை சாதிக்க இயலும். உடல்நலக்குறைவு ஏற்படலாம். தொழில், பணியில் பல்வேறு தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள். நிதானமான அணுகுமுறையால் வெற்றி காணும் ஆண்டு.

திருவாதிரை : நினைப்பது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். தடை ஏற்பட்டாலும் சூழலுக்கேற்ப செயல்படுவீர்கள். செலவுக்கேற்ப வருமானம் உயரும். குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். தம்பதியராக இணைந்து செய்யும் பணிகள் வெற்றி பெறும். மறதியால் சில இழப்பு ஏற்படலாம். செய்ய வேண்டிய பணிகளை எழுதி வைத்துக்கொண்டு செயலாற்றுவது நல்லது. மாணவர்கள் விடாமுயற்சியுடன் படிப்பது அவசியம். உடல்நலனில் கவனம் தேவை. தொழிலில் போட்டி, பொறாமை கூடும். பணியாளர்கள் வீண்பழி சுமக்க நேரிடும். வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது.

புனர்பூசம் 1, 2, 3ம் பாதம் : வாக்கை காப்பாற்ற மிகுந்த சிரமப்படுவீர்கள். புதிய முயற்சியில் இறங்க வேண்டாம். குடும்பத்தில் சலசலப்பு தோன்றும். பெற்றோரின் ஆலோசனை கைகொடுக்கும். உடன்பிறந்தோருடன் கருத்துவேறுபாடு வரலாம். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பது அவசியம். பெண்கள் அடுத்தவர் விஷயத்தில் தலையிட வேண்டாம். உடல் உபாதைகள் அவ்வப்போது ஏற்படும். தொழிலில் மந்தசூழலை உணர்வீர்கள். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். வியாபாரிகள் லாபத்திற்கு முக்கியத்துவம் தர இயலாது. தடையை தகர்க்க தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய ஆண்டு இது.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar