பதிவு செய்த நாள்
01
ஜன
2021
04:01
சித்திரை 3, 4ம் பாதம் : சுகமான சூழலை உணர்வீர்கள். நல்லதே செய்தாலும் அடுத்தவர்களுக்கு தவறாக தோன்றும். நிதிநிலையில் நிம்மதி காண்பீர்கள். குடும்பத்தினரின் பெயரில் சொத்து வாங்க முற்படுவீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெறுவர். பொதுக்காரியங்களில் முன்நின்று செயல்படுவீர்கள். வளர்ப்பு பிராணிகளிடம் எச்சரிக்கை தேவை. ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். பெண்கள் போலி சாமியார்களை அணுகாமல் இருப்பது அவசியம். பணியாளர்கள் சம்பளம் உயர்வு அடைவர். சுயதொழில் செய்வோர் ஓய்வின்றி உழைப்பர். எதிர்கால நன்மை கருதி புதிய திட்டம் ஒன்றில் ஈடுபடுவீர்கள்.
சுவாதி : சோதனையான காலத்திற்குள் நுழைகிறீர்கள். பேச்சில் தடுமாற்றம் வரலாம். நிதானம் தேவை. வரவை விட செலவு கூடும். சுபசெலவாக மாற்றிக் கொள்வது நல்லது. சகோதரருக்கு உதவ நேரிடும். உறவினர் வழியில் கலகம் உண்டாகும். மாணவர்கள் ஆசிரியரின் ஆதரவைப் பெற வேண்டியது அவசியம். அஜீரணக் கோளாறால் அவதிப்படலாம். சோம்பலை விரட்ட உடற்பயிற்சி செய்வது நல்லது. பணியாளர்கள் பணிச்சுமையால் அவதிப்படுவர். சுயதொழில் செய்வோர் உரிய அங்கீகாரம் கிடைக்க பொறுமையுடன் இருக்கவும். வெளிநாட்டு பணிகளில் எச்சரிக்கை தேவை. நிதானமுடன் செயல்படும் ஆண்டு இது.
விசாகம் 1, 2, 3ம் பாதம் : எதையும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. எதிர்பாராத பயணம் செல்லலாம். வளர்ப்பு பிராணிகளால் மகிழ்ச்சி காண்பீர்கள். சொத்து வாங்குவோர் வில்லங்கச் சான்றிதழில் கவனம் செலுத்துவது நல்லது. பிள்ளைகளின் செயல்பாடு எதிர்பார்ப்புக்கு மாறாக அமையும். சொத்து பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும். உயர்கல்வியில் இடம்பிடிக்க மாணவர்களுக்கு கடைசி நேரத்தில் வாய்ப்பு கைகூடும். முக்கிய பிரச்னையில் உங்களை பேச வைத்து சிலர் வேடிக்கை பார்க்கலாம். நரம்பு தளர்ச்சி, தைராய்டு பிரச்னையில் சிக்கலாம். பணியாளர்களுக்கு பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். திறமையால் முன்னேறும் ஆண்டு.