பழநி என்றாலே நமக்கு தெரிந்தது மலையிலுள்ள முருகன் தான். ஆனால் தைப்பூசத்திற்கு கொடியேற்றுவது எங்கு தெரியுமா? அடிவாரத்திலுள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில். அடிவாரக் கோயிலில் பெரியநாயகி அம்மன் (பார்வதி) கைலாசநாதருக்கு (சிவன்) நடுவில் முருகன் சன்னதி உள்ளது. இந்த முருகனை வழிபட்ட பின்னரே பக்தர்கள் மலையேறுவர். மலையிலுள்ள முருகன் பிரபலமாவதற்கு முன்பு வரை இங்குள்ள பார்வதி, சிவபெருமானுக்கே தைப்பூச விழா நடந்தது. நாளடைவில் மலைக்கோவில் முருகனுக்குரியதாக மாறினாலும் கொடியேற்றம் இந்தக் கோயிலிலேயே நடக்கிறது. விழாவின் ஏழாம் நாளில் தேர் இங்கிருந்தே புறப்படுகிறது. ஏராளமான தொழிலதிபர்கள் பழநி முருகனை பங்குதாரராக கருதுகின்றனர். லாபத்தில் ஒரு பங்கை முருகனுக்கு காணிக்கையாக்குகின்றனர். தைப்பூசம், புதுக்கணக்கு தொடங்கும் நாட்களில் ஏராளமானோர் பழநி முருகனை தரிசிக்கின்றனர்.