Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலில் ... குமரி பகவதியம்மனுக்கு ஆறாட்டு விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆறுமுகநேரி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2012
11:06

ஆறுமுகநேரி : ஆறுமுகநேரி விநாயகர் கோயில் தெரு செல்வ விநாயகர், அழகிய சுந்தர விநாயகர் கோயில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா நடந்தது. ஆறுமுகநேரி விநாயகர் கோயில் தெருவில் உள்ள செல்வ விநாயகர், அழகிய சுந்தர விநாயகர் கோயிலில் புதிதாக விமானம் கட்டப்பட்டு திருப்பணிகள் நடந்தது. திருப்பணி நிறைவடைந்ததை அடுத்து நூதன விமான ஜீர்னோத்தாரண அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 31ம் தேதி காலை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், குபேரலெட்சுமி ஹோமம், கோபூஜை, தனபூஜை நடந்தது. மாலை ஆறுமுக விநாயகர் கோயிலில் இருந்து புனித தீர்த்தங்கள் பவனியாக கோயிலுக்கு கொண்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து கும்ப அலங்காரம், யஜமான வர்ணம், ஆச்சார்ய வர்ணம், கலா கர்ஷனம், முதல்கால யாகசாலை பூஜை, பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. கும்பாபிஷேக தினமாக 1ம் தேதி காலை 2ம் கால யாகசாலை பூஜை நடந்தது. இதனைத் தொடர்ந்து யாத்ராதானம், கடம் புறப்படுதல் நடந்தது. பின்னர் சிவாச்சார்யார்கள் விமானத்திற்கு அபிஷேகம் செய்தனர். இதனைத் தொட ர்ந்து செல்வவிநாயகர், அழகிய சுந்தர விநாயகருக்கு அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம், மகா அபிஷேகம், தீபாராதனை, அன்னதானம் நடந்தது. இரவு சிறப்பு அலங்காரத்துடன் திருவிளக்கு பூஜை நடந்தது. கும்பாபிஷேகத்தை ஐயப்பபட்டர் நடத்தினார். நிகழ்ச்சியில் சைவ வேளாளர் சங்க தலைவர் சங்கரலிங்கம், துணைத் தலைவர் மாணிக்கவாசகம், செயலாளர் முத்துராமன், பெ õருளாளர் கற்பகவிநாயகம், உதவி பொருளாளர் முருகன், உதவி செயலாளர் திரவியசுந்தரம், இல்லங்குடியாபிள் ளை, சோமநாத சுவாமி கோயில் பக்தஜன சபை செயலாளர் கந்தையா, பொரு ளாளர் அரிகிருஷ்ணன், அதிமுக.,நகர செயலாளர் பொன்ராஜ், அவைத் தலைவர் அமிர்தராஜ், வட்டார காங்.,தலைவர் தங்கமணி, சப்இன்ஸ்பெக்டர் குமாரசெல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பள்ளிக்கரணை; பள்ளிக்கரணை சாந்தநாயகி சமேத ஆதிபுரீஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத சோமவாரத்தை ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தி ராமர் கோயிலில் தர்ம துவஜாரோஹணம் (கொடி ஏற்றுதல்) விழா நாளை 25ம் தேதி கோலாகமாக நடைபெற ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருச்சானூர் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவில் பத்மாவதி தாயார் சந்திர பிரபை வாகனத்தில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை;  திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோவில் தியாகராஜ சுவாமி புதிய தேர்  திருப்பணியை குருமகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar