பதிவு செய்த நாள்
02
ஜூன்
2021
04:06
சேலம்: பட்டைக்கோவிலில், மகாலட்சுமி தாயாருக்கு முதல்முறை வசந்த விழா நடந்தது. சேலம், பட்டைக்கோவில் வரதராஜ பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும், அக்னி நட்சத்திர உக்கிரம் தணிய, பெருமாளுக்கு, 10 நாள் வசந்த விழா நடத்தப்படும். நடப்பாண்டு விழா நிறைவடைந்த நிலையில், மக்கள் சுகமாக வாழ, நடப்பாண்டு முதல் மகாலட்சுமி தாயாருக்கும், தனியாக வசந்த விழா, ஒரு வாரம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று முதல் துவங்கியது. மகாலட்சுமி தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்து, வெட்டிவேர் பந்தல் அமைத்து, அதில் அன்ன வாகனத்தில் வெள்ளை பட்டுடன் மகாலட்சுமி தாயாரை எழுந்தருளச்செய்தனர். கொரோனா, கறுப்பு பூஞ்சை உள்ளிட்ட அனைத்து வித நோய்களில் இருந்து மக்கள் விடுபட வேண்டி, பட்டாச்சாரியார்களால் தன்வந்திரி, சுதர்சன மகா மந்திரங்கள் பாராயணம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகளுடன் முதல் நாள் விழா முடிந்தது. பக்தர்கள் யாருமின்றி பட்டாச்சாரியார்கள், கோவில் பணியாளர்கள் மட்டும் பங்கேற்றனர்.