பழநி: பழநி, கோதைமங்கலத்தில் உள்ள பாப்பான் குளக்கரை கோயிலிலுள்ள சிவலிங்கம் மர்ம நபர்களால் சேதப் படுத்தப் பட்டுள்ளது.
பழநி அருகே கோதைமங்கலம் பகுதியில் பெரியஆவுடையார் கோயில் உள்ளது. அங்கு செல்லும் வழியில் பாப்பான் குளத்துக் கரையில் சிவலிங்கம், நந்தி, கன்னிமார், கருப்புசாமி கோயில் உள்ளது. இன்று காலை அங்கிருந்த சிவலிங்கம் முற்றிலும் சேதம் அடைந்திருந்தது. உடைந்த லிங்க பகுதியின் பாகம் அப்பகுதியில் தென்படவில்லை. இது குறித்து அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதுகுறித்து விஸ்வ ஹிந்து பரிசத் சார்பாக மாவட்டச் செயலாளர் செந்தில்குமார் கூறுகையில், "கோதைமங்கலம்குளத்துக் கரையில் உள்ள சிவன் சிலையை சமூக விரோதிகள் திட்டமிட்டு சேதப்படுத்தியுள்ளனர். அவர்களை கண்டு கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்.