பதிவு செய்த நாள்
07
ஜூன்
2021
06:06
கோத்தகிரி: நீலகிரி சேவாபாரதி மற்றும் சேவா கேந்திரம் சார்பில் கோத்தகிரியில் ஆயிரம் குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. நீலகிரி எஸ்.பி., பாண்டியராஜன் மற்றும் சேவா கேந்திரம் ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் சந்தர் ஆகியோர் தலைமையில், முன் களப்பணியாளர்களான துப்புரவு பணியாளர்கள், ஊர்காவல் படையினர் மற்றும் ஆதிவாசி மக்கள் ஆயிரம் குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன. தவிர, 100 பி.பி.இ., கிட், 100 ஆக்சிமீட்டர் மற்றும் 25 ஆயிரம் முகக்கவசம் வழங்கப்பட்டது. இதில், ஏ.டி.எஸ்.பி., சார்லஸ், இன்ஸ்பெக்டர் வேல்முருகன், எஸ்.ஐ.,கள் அருண்குமார் மற்றும் மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.