தஞ்சையில் சந்தனகாப்பு அலங்காரத்தில் மகா வாராகி அம்மன் அருள்பாலிப்பு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூலை 2021 05:07
தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஆஷாட நவராத்திரி பெருவிழாவின் நான்காம் நாளான இன்று, மகா வாராகி அம்மன் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோவிலில் வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா 09ம் தேதிகணபதி ஹோமத்துடன் துவங்கியது. தஞ்சாவூர் பெரியகோவிலிலுள்ள வாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் 10 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும். இதில் அம்மனுக்கு நாள்தோறும் அபிஷேகமும், அலங்காரமும் நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று, மகா வாராகி அம்மன் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் சமூக இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்டனர்.