தேவகோட்டை: தேவகோட்டை அழகாபுரி தெற்குத் தெருவில் உள்ள முத்து மாரியம்மன் கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக ஹாலாஸ்ய சங்கரன் கணபதி ஹோமம், இரண்டு காலயாக பூஜை நடந்தது . இதனைத் தொடர்ந்து கும்பாபிஷேகம், மகாபிஷேகம் நடந்தது. கூட்டமின்றி பக்தர்கள் பரவலாக நின்று கும்பத்தில் புனித நீர் ஊற்றுவதை கண்டு தரிசித்தனர். மாலை அம்மனுக்கு சந்தனக் காப்பு மற்றும் சிறப்பு அலங்காரம் செய்விக்கபட்டது. ஏராளமானோர் அம்மனை வழிபட்டனர்.