பதிவு செய்த நாள்
14
ஜூலை
2021
03:07
சென்னை:நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவிற்கு, தமிழக அரசு சார்பில், 45 கிலோ சந்தன கட்டைகள் வழங்க, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
நாகூர் தர்கா சின்ன ஆண்டவர் கந்துாரி மற்றும் பெரிய ஆண்டவர் கந்துாரி சந்தனக்கூடு திருவிழாவுக்கு, தமிழக அரசு சார்பில், ஆண்டுதோறும் சந்தன கட்டைகள் வழங்கப்படும். அந்த வகையில், இந்த ஆண்டு திருவிழாவுக்கு, 45 கிலோ சந்தன கட்டைகளை, தமிழக அரசு இலவசமாக வழங்க உள்ளது. இதற்கான அரசாணையை, முதல்வர் ஸ்டாலின், நாகூர் தர்கா நிர்வாகியான, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி அலாவுதீனிடம், நேற்று முன்தினம் தலைமை செயலகத்தில் வழங்கினார். அப்போது, வனத்துறை முதன்மை செயலர் சுப்ரியா சாஹு மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.