Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மகத்துவம் நிறைந்த சாதுர்மாஸ்ய ... எல்லையம்மன் கோவிலில் 1,008 பால்குடம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆஸ்திரேலியா டூ இந்தியா திரும்பும் கலை பொக்கிஷங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2021
03:07

 இந்தியாவின் கலை, பண்பாட்டை வெளிப்படுத்தும், எட்டு பழங்கால சிலைகள் மற்றும் ஆறு ஓவியங்கள், ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட உள்ளன. இதை, நேஷனல் கேலரி ஆப் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இந்த தகவலை, கலை, பண்பாட்டு ஆய்வாளரும், சிங்கப்பூரில் இருந்து செயல்படும், இந்தியா பிரைட் பிராஜெக்ட் நிறுவனருமான எஸ்.விஜயகுமார், பெருமையோடு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: ஆஸ்திரேலியாவின், கான்பரா நகரில் இருக்கும், தேசிய அருங்காட்சியகத்தில், இந்திய வரலாற்றை கூறும் ஏராளமான சிலைகளும், ஓவியங்களும் உள்ளன. அவற்றை மீட்டு, இந்தியாவுக்குக் கொண்டு வர முயற்சி எடுக்கப்பட்டது.

தமிழக போலீசில், சிலை பாதுகாப்புப் பிரிவு ஏற்படுத்தப்பட்டு, சிலை திருடர்களைப் பிடித்து விசாரித்தனர். அப்போது தான், சிலைகள், வெளிநாடுகளுக்கு கடத்தி விற்கப்பட்டது தெரிய வந்தது. அச்சிலைகளை, போலீஸ் அதிகாரிகள், மீண்டும் தமிழகத்துக்குக் எடுத்து வரும் முயற்சியில் இறங்கினர். விளைவு, பல நாடுகளில் இருந்தும் சிலைகள் மீட்கப்பட்டு வருகின்றன. எங்களை போன்ற சமுதாய ஆய்வாளர்களும், வெளிநாடுகளில் வாழ்ந்தபடி, இந்திய சிலைகள், பொக்கிஷங்கள் எங்கு இருக்கின்றன என்ற, தேடுதலில் உள்ளனர்.இப்படித் தான், ஆஸ்திரேலியாவின், கான்பரா அருங்காட்சியகத்தில் இருக்கும் பல்வேறு சிலைகளும், ஓவியங்களும் மீட்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தான் தற்போது, எட்டு சிலைகளும், ஆறு ஓவியங்களும், இந்தியாவுக்கு திரும்புகின்றன. அவை, தமிழகம், குஜராத், ராஜஸ்தான், உ.பி., ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களைச் சேர்ந்தவை. இந்தியாவுக்கு திரும்பியதும், அந்தந்த மாநிலங்களுக்கு, மத்திய அரசால் அனுப்பி வைக்கப்படும். இந்தியாவுக்கு திரும்பும் மகிஷாசுர மர்த்தினி கற்சிலை, குஜராத்தைச் சேர்ந்தது. துர்கை, எருமை மேல் இருப்பது போன்ற காட்சியுடைய சிலை, 12ம் நுாற்றாண்டில் வடிவமைக்கப்பட்டது. நடன நிலையில் இருக்கும் திருஞானசம்பந்தர், நாயன்மார் சிலை, தமிழகத்தை சேர்ந்தவை. இவை, 1960ல், சீர்காழிக்கு அருகில் உள்ள சாயாவனம் கோவிலில் இருந்து திருடப்பட்டுள்ளன.

சுபாஷ் கவுர் என்ற, இந்திய சிலைத் திருடன் தான், இவற்றை, அமெரிக்காவுக்கு விற்றிருக்கிறான். அவன், சிலை தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு, தற்போது புழல் சிறையில் இருக்கிறான். இந்தியாவுக்கு திரும்பும், 14 பொருட்களில், 13ஐ, அமெரிக்காவில் இருக்கும் டீலர் வில்லியம் வுல்ப் என்பவர், 1968ல், ஆஸ்திரேலியாவுக்கு விற்றிருக்கிறார். ஒரு நாட்டில் இருந்து திருடப்பட்ட கலைப் பொருட்கள், அந்த நாட்டுக்குரியது தான் என, சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டால், அவற்றை அந்த நாட்டுக்கே திருப்பி ஒப்படைக்க வேண்டும் என, ஏற்கனவே, ஐ.நா., சபை அறிவித்துள்ளது. அது, மரபாக பின்பற்றப்படுகிறது. அந்த வகையில் தான், தன் தேசிய அருங்காட்சியகத்தில், இந்தியாவுக்கு சொந்தமான கலைப் பொருட்கள் இருக்கின்றன என தெரிந்து, அது நிரூபிக்கப்பட்டதும், இந்தியாவுக்கு அவற்றை, ஆஸ்திரேலிய அரசு திருப்பி அனுப்புகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் --

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கரிங்கரைப்புள்ளி காடாங்கோடு பகவதி அம்மன் கோவில் பிரதிஷ்டை தின உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; அஷ்டமி பூப்பிரதட்சனம் யொட்டி ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், உலக சாதனை முயற்சியாக, 900க்கும் மேற்பட்ட நாட்டிய ... மேலும்
 
temple news
கூடலுார்; கூடலுார் கூடலழகிய பெருமாள் கோயிலில் கூடாரவல்லி திருவிழா வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலுக்கு வரும் பாதயாத்திரை சாரல் மலையில் சாலைகளில் பாதுகாப்புக்கு இன்றி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar