Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
11-ம் நுாற்றாண்டு சதிக்கல் சிலை ... ஆஸ்திரேலியா டூ இந்தியா திரும்பும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகத்துவம் நிறைந்த சாதுர்மாஸ்ய விரதம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2021
03:07

ஹிந்துக்களின் முக்கியமான விரதங்களில் ஒன்றாக கருதப்படுவது, சாதுர்மாஸ்ய விரதம். சன்னியாசிகள் மட்டுமின்றி, ஒவ்வொருவரும் அனுஷ்டிக்க வேண்டிய விரதமாகும்.மற்ற மாநிலங்களில் பரவலாக, இந்த விரதம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும், தமிழகம், கேரளாவில் விழிப்புணர்வு இல்லாதததால், சன்னியாசிகளை தவிர, பலர் கடைப்பிடிப்பதில்லை. ஆனால், இந்த சாதுர்மாஸ்ய விரதத்திற்கு மகத்துவம் அதிகம் என்கின்றனர், சான்றோர்கள்.

வேத வியாசர்: ஆஷாட பவுர்ணமி, வியாச பவுர்ணமி என்றும்அழைக்கப்படுகிறது. கீதையில் கிருஷ்ண பரமாத்மா, ரிஷிகளில் நான் வியாசராக இருக்கிறேன் என்கிறார். வியாசரை, வேத வியாசர் என்று, அழைப்பதுண்டு.அவர், வேதங்களை தொகுத்ததாலும், ஐந்தாம் வேதம் எனப்படும் மகாபாரதம் எழுதியதாலும், இவ்வாறு அழைக்கப்படுகிறார். அது மட்டுமன்றி, பல புராணங்கள், பிரம்ம சூத்திரம், ஸ்ரீமத் பாகவதம் ஆகியவை, வியாசரால் அருளப்பட்டவை. ஆஷாட பவுர்ணமி அல்லது வியாச பவுர்ணமி என அழைக்கப்படும், ஆடி மாத பவுர்ணமி முதல், கார்த்திகை மாத பவுர்ணமி வரை, தேவர்களும், பகவான் விஷ்ணுவும் யோக நித்திரையில் இருக்கும் காலம் என்கின்றனர்.எனவே, இந்த காலகட்டத்தில் செய்யும் இறை வழிபாடு மிகவும் பலன் தரக் கூடியது. மேலும், அந்த நான்கு மாதங்கள் மழைக் காலம். அந்த காலத்தில், பல ஜீவராசிகளும் இடம்பெயர்ந்து வாழும்.எனவே, அவற்றுக்கு தொந்தரவு கொடுக்காமல், ரிஷிகள், சன்னியாசிகள், ஆச்சாரியர்கள், ஆஷாட பவுர்ணமி அன்று வியாச பூஜை செய்து, அந்த நாள் முதல், ஒரே இடத்தில் நான்கு மாதங்களுக்குத் தங்கியிருப்பர்.சாதுர்மாஸ்ய விரத காலத்தில், அவர்கள் பூஜைகள், மந்திர ஜபங்கள் ஆகியவற்றில் ஈடுபடுவர். அவை, உலகம் முழுதுக்கும் பன்மடங்கு பலன் தரக்கூடியவை. குறிப்பிட்ட நான்கு மாதமும் சில உணவு
கட்டுப்பாடுகளோடு, ஒரு விரத முறையையும் அனுஷ்டிப்பர்.இதற்கு, சாதுர்மாஸ்ய விரதம் என்று பெயர். சாதுர்மாஸ்ய காலக்கட்டங்களில், உணவுக் கட்டுப்பாடுகளை வகுத்து கொள்வர்.முதல் மாதம் உணவில் காய்கறி, பழங்களும் இருக்கும். இரண்டாம் மாதம் பால், மூன்றாம் மாதம் தயிர், நான்காம் மாதம் பருப்பு வகைகளை தவிர்ப்பர்.

சகலருக்குமான விரதம்!: சன்னியாசிகள் மட்டு மன்றி, இல்லத்தில் வசிப்போரும் கட்டாயம், இந்த நான்கு மாதங்களும் விரதம் கடைப்பிடிக்க வேண்டும்.தினமும், ஒரு குறிப்பிட்ட கால அளவை நிர்ணயித்து, இறைவனின் நாமத்தை தினமும் உச்சரித்து வந்தால், சகல துன்பங்களும் நீங்கும் என்பது ஐதிகம். அவரவர்களின் இஷ்ட தெய்வ நாமத்தை உச்சரிக்கலாம்.குறிப்பாக, அவரவர் வழிபடும் மகானை நினைத்து, மலர் சார்த்தி வணங்குவது சிறப்பு.வாழ்வில் இருக்கும் பல பிரச்னைகள் தீர்க்க, இந்த காலக்கட்டத்தில் செய்யும் இத்தகைய வழிபாடுகள் பயன் அளிக்கும். எனவே, இன்று முதல் தவறாமல் வீட்டில் விளக்கேற்றி, குறிப்பிட்ட நேரம் நாம ஜபம் செய்வது, மிகவும் பயனளிக்கும் என்கின்றனர் சான்றோர்.

ஜெயின் மதத்தில்...: ஜெயின் மதத்தினரும், சாதுர் மாஷ் விரதத்தை, முக்கிய நோன்பாக கருதுகின்றனர்.அந்த காலத்தில் சொற்பொழிவு, விரதம் ஆகியவற்றில் ஈடுபடுவது, முக்கியமாக கருதப்படுகிறது. சிலர், உணவு உட்கொள்ளாமல், வெந்நீர் மட்டும் அருந்தி, அவரவரால் முடிந்த நாட்களுக்கு விரதமிருப்பர்.இந்த விரதம், பிரஜியுஷன் பர்வ் எனும், எட்டு நாள் ஆன்மாவில் லயிக்கும் நிகழ்ச்சியாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாளில் தெரியாமல் செய்த தவறுக்கும் மன்னிப்பு கேட்பர். சாதுர்மாஸ்ய விரத காலத்தில், அகிம்சையை கடைப்பிடிப்பது, அவர்களின் பிரதானம்.

உபன்யாசகர் ஏ.பி.என்.சுவாமிகள்: சன்னியாசிகள் எப்போதும் இடம் விட்டு இடம் பெயர்வர். மழைக் காலங்களில் பூமியில் இருந்து, பூச்சி உள்ளிட்ட ஜீவராசிகள் இடம் பெயரும். அவை சன்னியாசிகளின் பாதம் பட்டு பாதிக்கப்பட்டால், அது சன்னியாசத்திற்கு விரோதம். எனவே, அந்த நான்கு மாதங்கள், சன்னியாசிகள் இடம் பெயர மாட்டார்கள். அந்த காலக்கட்டத்தில் சன்னியாசிகளையும், பிரம்மச்சாரிகளையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு, இல்லறத்தில் இருப்பவர்களுக்கு உண்டு.முன்பு, நான்கு மாதங்கள் சாதுர்மாஸ்யம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. காலப்போக்கில், பக்ஷம் எனக் கணக்கிட்டு, நான்கு பட்சம் அதாவது, 60 நாட்கள் கடைப்பிடிக்கின்றனர்.தமிழகம், கேரளா தவிர்த்து, மற்ற மாநிலங்களில், இல்லறவாசிகள் பெரும்பாலும் சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டிக்கின்றனர். அந்த விரத காலத்தில், உணவில் கட்டுப்பாட்டோடும் இருக்கின்றனர்.பாகவதம் உள்ளிட்ட நுால்களில், சாதுர்மாஸ்ய விரதம் குறித்து, விசேஷமாக கூறப்பட்டுள்ளது. ஸ்காந்த புராணத்தில், சாதுர்மாஸ்யம் குறித்து, சிறப்பான தகவல்கள் சொல்லப்பட்டுள்ளன. வேத நெறிபடி தொடருபவர்கள் அனைவரும் சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொள்ளலாம். அதனால், நல்ல பலன் உண்டு.

* ஸ்ரீவித்யா உபாசகர் குருஜி ஷாக்தஸ்ரீ கார்த்திக் விஸ்வநாதன்: சாதுர்மாஸ்யம் என்றால், நான்கு மாதங்கள் என்று பொருள். ஆடி மாத ஏகாதசி முதல், ஐப்பசி மாத ஏகாதசி வரை, இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.சூரிய பகவான் தெற்கு நோக்கி பயணிக்கும் போது, இந்த விரதம் துவக்கி அனுஷ்டிக்கப்படுகிறது. இல்லறவாசிகள், இந்த காலக்கட்டத்தில், விசேஷங்கள் எதுவும் செய்யாமல், தர்ம பிரசாரம்; தியானம், விரதங்கள்; புன்னிய நதிகள், சமுத்திர ஸ்தானம் ஆகியவற்றை மேற்கொள்ளவர். வைணவ சம்பிரதாயத்தில் உள்ளவர்கள், சாதுர்மாஸ்ய விரத்தின்போது, உணவு கட்டுப்பாட்டை தீவிரமாக கடைப்பிடிப்பர். சன்னியாசிகள் சாதுர்மாஸ்யத்தை, நான்கு பக்ஷமாக அனுஷ்டிப்பர். சாதுர்மாஸ்யத்தில் குருபூர்ணிமா, கிருஷ்ணஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி விசேஷமான பூஜைகள் வரும். இந்த காலக்கட்டங்களில் சன்னியாசிகளை, ஆச்சார்யர்களை சந்தித்து, ஆசிர்வாதம் பெறுவது நல்ல பலன் தரும்.விரத காலக்கட்டத்தில் தேவதைகளை ஆவாகனம் செய்து, குருபூர்ணிமா அன்று, சங்கல்பம் செய்துக் கொள்வர். மேலும், தினசரி உபதேங்கள், அருளாசி வழங்குவர்.இந்த விரதம், சன்யாசிகளுக்கு மட்டுமல்லாமல், இல்லறவாசிகள், பிரம்மோபதேசம் வாங்கியவர்களுக்கும் கட்டாயம் தான். காலப்போக்கில், அது குறித்த பலன்கள் தெரியாமல் போனதால், சாதுர்மாஸ்ய விரதம் இருப்பது குறைந்து போனது. இந்த விரதம் மேற்கொண்டால், நல்ல பலன்கள் கிடைக்கும்.

விஜயேந்திரர் சிறப்பு பூஜைகள்:   பாரத தேசம் முழுதும் தர்மத்தை நிலைநாட்டி காப்பாற்றுவதற்காக, பரமேஸ்வரரின் அவதாரமும், ஆச்சார்யர்களில் சிறந்தவருமான ஸ்ரீ சங்கராச்சாரியார், 2,550 ஆண்டுகளுக்கு முன், காஞ்சிபுரத்தில் ஸ்ரீமடத்தை நிறுவினார்.

இந்த காஞ்சிமட பீடத்தின் மரபில் தோன்றிய, ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் முதன்மை சீடரும், மடத்தின், 70வது பீடாதிபதியுமான விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னோர்கள் மரபுப்படி, தர்மத்தை செய்தும், செய்வித்தும் வருகிறார். அவர் ஆண்டுதோறும் அனுஷ்டித்து வரும் சாதுர்மாஸ்ய விரதம், இந்த ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம், ஓரிக்கை கிராமத்தில் உள்ள காஞ்சி காமகோடி பீடம் மகாசுவாமி மண்டபத்தில், 24ம் தேதி வியாச பூஜையுடன் துவக்கியது.

இதுகுறித்து, காஞ்சி சங்கர மடத்தின் ஆன்மிக அறிஞர்கள் கூறியதாவது:இந்த ஆண்டு சாதுர்மாஸ்ய விரதம், ஓரிக்கையில், 24ம் தேதி துவங்கி, செப்., 20ல் நிறைவடைகிறது. இந்த ஆண்டு மகாசுவாமிகளின் மண்டபத்தில், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சாதுர்மாஸ்ய விரதம் இருக்க முடிவெடுத்தார்.அதன்படி, இங்கு சாதுர்மாஸ்ய விரத பூஜை நடக்கிறது. தினமும் காலை சுவாமிதரிசனம் நடக்கும். பஞ்சாங்க சதஸ் என்ற ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இந்த ஆண்டு கொரோனா காரணத்தை முன்னிட்டு, இவை, ஆன்-லைன் வாயிலாக நடத்தப்படுகிறது.
பின், அக்னி ஹோத்ர சதஸ், சதுர்வேத பாராயணம், வேத பாஷ்ய சதஸ், அத்வைத வேதாந்த சதஸ் மற்றும் உபன்யாசங்கள், சங்கீதவாத்ய நாமசங்கீர்த்தனங்கள் நடக்கிறது.ரிக்வேத கன பாராயணம், 40 நாட்கள் தொடர்ந்து காலை, மாலை, இரவு என, மூன்று வேளைகளிலும் நடக்கிறது. அதே ரிக்வேதத்தில் சங்கீத பாராயணமும் நடக்கிறது. சாமவேத பாராயணமும் நடத்தப்பட உள்ளது.

சந்திரமவுலீஸ்வரருக்கு தினந்தோறும் அபிஷேகம், ருத்ர பாராயணம் நடக்கும். பின், கணபதி ஹோமம், ஆயுஷ் ஹோமம், துர்கா ஹோமம் என, ஏதேனும் ஒரு ஹோமங்கள் நடத்தப்படுகின்றன.சந்திரமவுலீஸ்வரர் பூஜை தினமும் மூன்று முறை பூஜையும் நடக்கும். இந்த பூஜைகளில் பங்கேற்பவர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும்.
இந்த சாதுர்மாஸ்ய தினசரி பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஆச்சாரியரின் அருளைப் பெற வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.- -நமது நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராஹி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: மதுரை வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தபின், அழகர்கோவில் திரும்பிய ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர்; திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோயிலில் ... மேலும்
 
temple news
சங்கடஹர சதுர்த்தியையொட்டி, கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.விருத்தாசலம் ... மேலும்
 
temple news
பழநி; பழநியில் 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிவகங்கைச் சீமை செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டது, இதில் பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar