தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா தியான லிங்க வளாகம், தற்காலிகமாக, இன்று (3ம் தேதி) மற்றும் 8ம் தேதி மூடப்படுவதாக, ஈஷா அறக்கட்டளை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஈஷா அறக்கட்டளை நிர்வாகத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, கோவை ஈஷாவிலுள்ள தியானலிங்க வளாகம், ஆகஸ்ட் 2, 3 மற்றும் 8ம் தேதிகளில் தற்காலிகமாக மூடப்படுகிறது. எனவே, இந்த தேதிகளில், பொதுமக்கள் தியானலிங்க வளாகத்திற்கு வருகைபுரிவதை தவிர்க்க வேண்டுகிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.