திண்டுக்கல் : தஞ்சாவூர் மாவட்டம், திருப்பழனம் ஆபத்சகாயேஸ்வரர் கோவிலுக்கு திண்டுக்கல்லில் 40 கிலோ எடையில் தொட்டிப் பூட்டு தயாரிக்கப்பட்டு உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், திருப்பழனம் ஆபத்சகாயேஸ்வரர் கோவிலுக்கு 40 கிலோ எடையுள்ள மெகா சைஸ் தொட்டிப் பூட்டு திண்டுக்கல்லில் தயாரிக்கப்பட்டுள்ளது.இதன் சாவி மட்டும் 2 கிலோ. பூட்டின் நீளம் 18 அங்குலம், அகலம் 12 அங்குலம். இதன் மதிப்பு 30 ஆயிரம் ரூபாய். இது தவிர, அதே கோவிலுக்கு 10 கிலோ மற்றும் 4 கிலோவில் மேலும் இரண்டு பூட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.தயாரிப்பாளர் சேகர் கூறுகையில், இயந்திர பயன்பாடின்றி, பாரம்பரியமாக மனிதர்களை கொண்டே 40 ஆண்டுகளாக பூட்டு தயாரிக்கிறேன். ஆபத்சகாயேஸ்வரர் கோவிலுக்கு தயாரிக்கப்படும் பூட்டு 10 லீவர் கொண்டது. தயாரிக்க 15 நாட்களாயின, என்றார்.