கோவில்கள் மூடல்: அகல் விளக்கு ஏற்றி பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஆக 2021 04:08
சிதம்பரம்: சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் ஆடி கடை வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையிலும் வாயிலில் வந்து வழிபட்ட சென்ற பக்தர்கள்.
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஆடிமாத உற்சவங்கள் நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதன் காரணமாக அம்மன் கோவில்கள் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது. சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் அனுமதி என்று ஆடி மாத உற்சவம் கோவிலுக்குள் ஆகவே நடந்து வரும் நிலையில் நேற்று ஆறு கரை வெள்ளியை முன்னிட்டு கோவில் மூடப்பட்டு இருந்தும் முன் பக்கம் மற்றும் பின் பக்க கோவில் கதவுகளை முன்பு பக்தர்கள் கற்பூரம் ஏற்றி, அகல் விளக்கு ஏற்றி சுவாமியை வழிபட்டு சென்றனர்.