பதிவு செய்த நாள்
29
ஆக
2021
02:08
திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலின் தலைமுடி ஏலம் இரண்டாவது முறையாக ரத்து செய்யப்பட்டது. திருத்தணி முருகன் கோவிலில், ஆண்டுக்கு ஒருமுறை தலைமுடி, உப்பு மிளகு, மலர் விற்பனை, அர்ச்சனை பொருட்கள் உட்பட மலைக்கோவில் மற்றும் சன்னிதி தெருவில் உள்ள கடைகளுக்கு பொது ஏலம் விடப்படுகிறது.அந்த வகையில், நடப்பாண்டிற்கான ஏலம், கடந்த மாதம், 12ம் தேதி நடந்தது. அப்போது, ஏலம் எடுக்க யாரும் வராததால், ரத்து செய்யப்பட்டது.இரண்டாவது முறை இந்நிலையில், இரண்டாவது முறையாக முருகன் கோவில் தலைமை அலுவலகத்தில், கோவில் தக்கார்லட்சுமணன், இணை ஆணையர் பொறுப்பு ரமணி ஆகியோர் முன்னிலையில், நேற்று ஏலம் நடந்தது.இதில், தலைமுடி தவிர, மீதமுள்ள இனங்கள் ஏலம் விடப்பட்டன. தலைமுடி காணிக்கைக்கு, விலை ஆரம்ப தொகை, 1.80 கோடி ரூபாய் என, கோவில்நிர்வாகம் நிர்ணயம் செய்தது. ஏலத் தொகை அதிகம்என்பதால், ஏலம் கேட்க யாரும் வராததால், இரண்டவது முறையாக ரத்து செய்யப்பட்டது.