காமம், கவலை, கோபத்தால் நம் மனம் அலை பாய்கிறது. ‘அது எப்படியாகுமோ? இது எப்படியாகுமோ?” என்ற வருத்தமும் அடிக்கடி தலை துாக்குகிறது. குழந்தைப் பருவம் முடிந்து வளர வளர இந்த குணம் அதிகரிக்கிறது. ஆனால் குழந்தையிடம் சோர்வோ, சுமையோ ஏதுமில்லை. அடம் பிடித்தாலும் சற்று நேரத்தில் மறந்து விட்டு மற்ற குழந்தைகளுடன் விளையாடும். இந்த சின்ன குழந்தைகள் வணங்கும் குழந்தை சுவாமியாக விநாயகர் இருக்கிறார். கனமான யானை வடிவில் இருந்தாலும், மூஞ்சூறு சுமக்கும் விதத்தில் பரம லேசான மூர்த்தியாகவும் இருக்கிறார். அவரது யானை முகத்தை பார்த்தாலே பரவசம் உண்டாகும்.