பதிவு செய்த நாள்
14
செப்
2021
11:09
சென்னை : தேசபக்தி, கலாசாரம், பண்பாடு மற்றும் ஆன்மிகத்தை பாரம்பரியமாக கட்டிக் காக்கும், தினமலர் நாளிதழ், நுாறாண்டு கடந்தும் வெற்றி வாகை சூட வேண்டும் என ஸ்ரீசாரதா ஆஸ்ரம தலைமை மாதாஜி யதீஸ்வரி ராமகிருஷ்ணா பிரியா அம்பா வாழ்த்து தெரிவித்துள்ளார். தேசிய தமிழ் நாளிதழான தினமலர், 71ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், உளுந்துார்பேட்டை ஸ்ரீ சாரதா ஆஸ்ரமத்தின் தலைமை மாதாஜி யதீஸ்வரி ராமகிருஷ்ண பிரியா அம்பா, பிரார்த்தனையுடன் கூடிய வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார்.அவரது வாழ்த்துச் செய்தி:தேசபக்தி, கலாசாரம், பண்பாடு, ஆன்மிகம் போன்றவற்றை பாரம்பரியமாக கட்டிக் காக்கும் தினமலர் நாளிதழ், நுாறாண்டு கடந்தும் வெற்றி வாகை சூட வேண்டும். முன்னோரின் வழிகாட்டுதல்படி, உன்னத உணர்வையும் கடும் உழைப்பையும், தினமலர் நிர்வாகிகள் வழங்கி வருவதை, தினமும் நாளிதழில் காண முடிகிறது.
மேற்கத்திய கலாசார தாக்கமும், சமூக ஊடகங்களின் ஆதிக்கமும், இளைஞர்களை பாதிக்கும் கால சூழலிலும், ஆன்மிகம், பண்பாடு, தேசநலன் சார்ந்த கட்டுரைகளை எழுதி, அவர்களுக்கு தேசபக்தியையும், பொறுப்பையும் உணர்த்தும் வகையில், தினமலர் நாளிதழ் இயங்குவது பாரட்டுக்குரியது.எவர் மீதும் காழ்ப்புணர்ச்சியோ, பழிவாங்கும் எண்ணமோ இல்லாமல், தினமலர் நாளிதழ் வெளிவருவது பத்திரிகை துறையில் காணக் கிடைக்காத நற்பண்பு. இந்த சிறப்புமிக்க நாளிதழ், மேன்மையும் வளர்ச்சியும் அடைய, எங்கள் ஆஸ்ரமத்தின் துறவிச் சகோதரிகள் அனைவரும் மனமுருகி வேண்டுகிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.