Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னி : புரட்டாசி ராசிபலன் விருச்சிகம் : புரட்டாசி ராசிபலன் விருச்சிகம் : புரட்டாசி ராசிபலன்
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
துலாம் : புரட்டாசி ராசிபலன்
எழுத்தின் அளவு:
துலாம் : புரட்டாசி ராசிபலன்

பதிவு செய்த நாள்

16 செப்
2021
03:09

சித்திரை - 3, 4:
திட்டமிட்டு செயலாற்றுவதில் வல்லவரான சித்திரை நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் உங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் நடக்கும். சுற்றியிருக்கும் சோம்பேறிகளிடமிருந்து உங்களை நீங்கள் விலக்கிக் கொள்ளுங்கள். உங்கள் பக்கமுள்ள நியாயம் ஓங்கும். பிள்ளைகள் வழியில் மட்டற்ற மகிழ்ச்சிகள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்கள் புதிய வழக்குகளை சந்திக்க நேரிடலாம். வேலை நிமித்தமாக வெளிநாட்டிற்கு பயணம் செல்ல வேண்டி வரலாம். தொழிலில் பயணங்களால் பொருள்சேர்க்கை ஏற்படும். சகோதரத்தின் வெளிநாடு பயணம் இனிதே நடைபெறும். சுயசார்பும் தன்னிறைவும் பெறுவீர்கள். பெண்கள் திருமண பாக்கியம் கைகூடி வரும். நெடுங்காலமாக சந்தான பாக்கியம் கிட்டாதவர்களுக்கு வரப்பிரசாதம் கிடைக்கும். கலைத்துறையினர் பொறுமையுடன் செயல்பட வேண்டும். மறைமுக போட்டிகளால் நெருக்கடிகளைச் சந்திக்கலாம். அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள். மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும். நினைத்தபடி பணவரவுகளைப் பெறலாம். லாபத்தையும் பெறுவார்கள். மாணவர்கள் மாணவகண்மணிகளுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். நினைத்த மதிப்பெண்கள் கிடைக்கும். அனைவருடனும் அனுசரித்து செல்வீர்கள்.

பரிகாரம்: லட்சுமி  நாராயணரை வழிபடுவது நல்லது. பசுவிற்கு ஆகாரம் கொடுப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: செப் 25, 26
அதிர்ஷ்ட நாள்: செப் 17, அக். 14, 15

சுவாதி:
மற்றவர்களின் கட்டாயத்திற்காக எந்த காரியத்தையும் செய்யாத சுவாதி நட்சத்திர அன்பர்களே நீங்கள் எதையும் ஆராய்ந்து செய்வதில் கெட்டிக்காரர். இந்த மாதம் எந்த இடத்தில் பேசும்போதும் கவனமாக பேசுவது நல்லது. வாக்குறுதிகளை கொடுப்பதை தவிர்ப்பது நன்மை தரும். விருப்பத்திற்கு மாறான காரியங்கள் நடக்கலாம். மனம் தளராமல் இருப்பது நல்லது. ஆசைகள் தோன்றலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்களை அனுசரித்து செல்வது வியாபார வளர்ச்சிக்கு உதவும். பணியில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. குடும்ப விஷயத்தில் அந்நிய நபர்களின் தலையீட்டை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து செல்வது மன அமைதியை தரும். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு எந்த நிலையிலும் மனம் தளராது காரியங்கள் செய்வது வெற்றியை தரும். மாணவர்களுக்கு யாருக்கும் உத்திரவாதம் அளிக்காமல் இருப்பது நல்லது. கல்வியில் கூடுதல் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு அன்பும் பாசமும் அதிகரிக்கும். கருத்துக்களை பரிமாறும் முன் பொறுமை மற்றும் நிதானம் அவசியம் என்பதை உணருங்கள். அரசியல் துறையினருக்கு விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம்.

பரிகாரம்: கருமாரியம்மனை வணங்கி வர எல்லா காரியங்களும் தடை நீங்கி சாதகமான பலன் தரும்.
சந்திராஷ்டமம்: செப் 26, 27
அதிர்ஷ்ட நாள்: செப் 18, அக். 15, 16

விசாகம் - 1, 2, 3:
திட்டமிட்டு காரியங்களை செய்து வெற்றி காணும் விசாக நட்சத்திர அன்பர்களே நீங்கள் தயக்க குணத்தை விடுவது வெற்றிக்கு உதவும். இந்த மாதம் காரிய அனுகூலம் உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும். வீட்டிலும் வெளியிலும் உங்களது செயல்களுக்கு ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் மேன்மை காண்பீர்கள். தொழில் வியாபாரம் திருப்தியாக நடக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். பணியில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் உண்டாகும். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் கிடைக்கும். பெண்களுக்கு நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். கலைத் துறையினருக்கு எல்லா நன்மைகளையும் தடையின்றி அடைவீர்கள். இதுவரை தொந்தரவு கொடுத்துவந்த நோய் விலகும். வரக்கூடிய உபரி வருவாயால் கடன் அடைபடும். அரசியல் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். எந்தக் கொள்முதலையும் தயக்கமின்றிச் செய்யலாம். வியாபாரம் பெருகும். போட்டியாளர்கள் விலகிச்செல்வார்கள்.

பரிகாரம்: வியாழக்கிழமையில் நவக்கிரக குரு பகவானை நெய் தீபம் ஏற்றி வணங்க காரிய தடை நீங்கும். மன குழப்பங்கள் குறையும்.
சந்திராஷ்டமம்: செப் 27, 28
அதிர்ஷ்ட நாள்: செப் 18, அக். 15, 16

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar