Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துலாம் : புரட்டாசி ராசிபலன் தனுசு : புரட்டாசி ராசிபலன் தனுசு : புரட்டாசி ராசிபலன்
முதல் பக்கம் » ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 )
விருச்சிகம் : புரட்டாசி ராசிபலன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விருச்சிகம் : புரட்டாசி ராசிபலன்

பதிவு செய்த நாள்

16 செப்
2021
03:09

விசாகம் - 4:
அடுத்தவர்களுக்கு புத்திமதி சொல்வதில் வல்லவரான விசாக நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் மிகுந்த தன்னம்பிக்கையுடையவரான தங்களுக்கு தெய்வ அனுகூலமும் சேர்ந்து இருப்பதால் சாதனைகள் புரிவீர்கள். மனதில் உற்சாகம் பிறக்கும். சில மாற்றங்கள் வந்து சேரும். அதிர்ஷ்ட வாய்ப்புகளும் வந்து சேரும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வுக்குரிய அறிவிப்பு வந்து சேரும். சிலருக்கு வெளியூருக்கு மாற்றலும் வரும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தொழிலில் வியாபாரங்கள் கைகூடா விட்டாலும் அதற்கான விதையை இப்போது ஊன்ற வேண்டி வரும். பெற்றோர் நலம் கவனிக்கப்பட வேண்டும். மக்கள் நலனிற்கு எந்த குறைபாடும் இருக்காது. தொழில் வெற்றியடையும் கவலை வேண்டாம். பெண்கள் கூடிய மட்டிலும் அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிருங்கள். பெரியோர்களை ஆலோசனைகளைக் கேட்டே எதையும் செய்வது நல்லது. கலைத்துறையினர் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் வருவாய் உண்டு. சோதனைகள் வெற்றியாக மாறும். அரசியல் துறையினருக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். மாணவர்களுக்கு பொன்னான காலகட்டமிது. எதிர்கால படிப்புகளுக்கான பணிகளை இப்போதே ஆரம்பிக்கலாம்.

பரிகாரம்: கோளறு பதிகம் படிப்பது. சிவன் கோவிலுக்கு இளநீர் அபிஷேகம் செய்வது.
சந்திராஷ்டமம்: செப் 27, 28
அதிர்ஷ்ட நாள்: செப் 19, அக். 16, 17

அனுஷம்:
புதிய இடங்களில் திறமையை வெளிப்படுத்த தயங்கும் குணமுடைய அனுஷ நட்சத்திர அன்பர்களே நீங்கள் இரக்க சிந்தனை நிறைந்தவர்கள். இந்த மாதம் எதிர்ப்புகள் விலகும். மற்றவர்கள் மத்தியில் உங்களது பேச்சுக்கு முக்கியத்துவம் இருக்காது. எனவே அறிவுரைகள் கூறுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஒரு சில சிக்கலான கட்டங்களை சந்திக்க நேரிடும். பணியில் இருப்பவர்கள் வீண் அலைச்சலும், மன சோர்வும் அடைய நேரிடும். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் நிம்மதியை பாதிப்பதாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் இடைவெளி ஏற்படலாம். பிள்ளைகள் மூலம் வீண் செலவு, சிறு பிரச்சனைகள் உண்டாக நேரலாம். பெண்களுக்கு எதிலும் உடனடி முடிவு கிடைக்காமல் இழுபறியான நிலை காணப்படும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் வீண் அலைச்சல் உண்டாகும். எதையும் செய்யும்போது கவனமாக இருப்பது நல்லது. கலைத்துறையினருக்கு ஓய்வில்லாமல் உழைக்க நேரும். புதிய ஒப்பந்தங்கள் வரும். லாபம் பெருகும். அரசியல் துறையினருக்கு மேலிடத்துடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களின் கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.

பரிகாரம்: குலதெய்வத்தை வணங்கி வர கஷ்டங்கள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
சந்திராஷ்டமம்: செப் 28, 29
அதிர்ஷ்ட நாள்: செப் 20, அக். 17

கேட்டை:
கடின உழைப்பும் நேர்மையான போக்கும் கொண்ட கேட்டை நட்சத்திர அன்பர்களே நீங்கள் புதுமையான சிந்தனைகளை உடையவர் இந்த மாதம் செலவு குறையும். எதிலும் அவசர முடிவு எடுப்பதை தவிர்ப்பது நல்லது. எதையும் ஆக்கபூர்வமாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். மன தெளிவு உண்டாகும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு வெற்றி காண்பார்கள். பணியில் இருப்பவர்கள் திறமையாக செயல்படுவார்கள். நிர்வாகத்தினரின் ஆதரவும் கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் நிம்மதியும் சுகமும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். தாய், தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை. குடும்ப வருமானம் உயரும். பெண்களுக்கு எந்த சூழ்நிலையிலும் நிதானமாக யோசித்து எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பாக எடுக்கும் முடிவுகளில் அவசரம் காட்டாமல் நிதானமாக செயல்படுவது நன்மை தரும். கலைத்துறையினருக்கு பொறுமையுடன் செயல்பட வேண்டும். மறைமுக போட்டிகளால் நெருக்கடிகளைச் சந்திக்கலாம். அயல்நாட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்துசேரும். அரசியல் துறையினருக்கு சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள். மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும்.

பரிகாரம்: புதன்கிழமையில் முருகனுக்கு செவ்வரளி மலர் சாற்றி வழிபட தடைப்பட்ட பணம் வந்து சேரும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.
சந்திராஷ்டமம்: செப் 29, 30
அதிர்ஷ்ட நாள்: செப் 21

பகிர்க copied
 
மேலும் ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 ) »
temple news
மேஷம்: அசுவினி: எந்த நிலை வந்தாலும் அதை எதிர்கொண்டு வாழக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் ... மேலும்
 
temple news
ரிஷபம் .. கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: செல்வாக்கு, அந்தஸ்து என்ற நோக்கத்துடன் வாழ்ந்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மிதுனம். .மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி ... மேலும்
 
temple news
கடகம்.. புனர்பூசம் 4 ம் பாதம்: சூழ்நிலை அறிந்து செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான ... மேலும்
 
temple news
சிம்மம்.. மகம்: படிப்பினைகளால் பாடம் கற்றுவரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் சங்கடங்கள் விலகும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar