Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புரட்டாசி மாத ஐயப்ப பூஜை பூம்புகாரில் நவராத்திரி கொலு பொம்மை கண்காட்சி பூம்புகாரில் நவராத்திரி கொலு பொம்மை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வாழை இலையில் பக்தர்களுக்கு அன்னதானம்
எழுத்தின் அளவு:
வாழை இலையில் பக்தர்களுக்கு அன்னதானம்

பதிவு செய்த நாள்

21 செப்
2021
10:09

 சென்னை: கோவில்களில் நேற்று முதல், வாழை இலையில் அன்னதானம் பரிமாறப்பட்டது. ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், தமிழகம் முழுதும் உள்ள 754 கோவில்களில், தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

பழநி, ஸ்ரீரங்கம், திருச்செந்துார், சமயபுரம், திருத்தணி ஆகிய பிரசித்தி பெற்ற கோவில்களில், நாள் முழுதும் அன்னதானம் வழங்கும் திட்டம் அமலில் உள்ளது. கொரோனா தொற்று காரணமாக, ௨௦௨௦ மார்ச் மாத இறுதியில், பக்தர்கள் தரிசனம், அன்னதானம் திட்டம் நிறுத்தப்பட்டது. கோவிலை சுற்றி வசிக்கும் ஏழை, எளிய பக்தர்கள் கோரிக்கை தொடர்பான, நம் நாளிதழ் செய்தியின் நடவடிக்கையாக, பிரதான கோவில்கள் சார்பில் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.புதிய அரசு பொறுப்பேற்றவுடன், உணவு பொட்டலங்களை வழங்குவதை முறைப்படுத்தி பரவலாக்கியது.

மருத்துவமனைகளிலும், ஏழை எளிய மக்களுக்கு நேரிலும் உணவு பொட்டலங்களாக வழங்கப்பட்டன.இந்நிலையில், அந்த நடைமுறையை மாற்றி, கோவில்களில் மீண்டும் இலையில் அன்னதானம் பரிமாறப்படும் என்று அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். அதன்படி, அனைத்து கோவில்களிலும் நேற்று வாழை இலையில் அன்னதானம் பரிமாறப்பட்டது; ஏராளமான பக்தர்கள், சமூக இடைவெளியுடன் அமர்ந்து சாப்பிட்டனர்.கொரோனா கட்டுப்பாட்டு காலம் வரை, வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் மட்டும், வழக்கம் போல உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட உள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர் : பழையாறையில் உள்ள சோழர்கள் காலத்திற்குரிய சோமநாதர் கோவிலின் ராஜகோபுரம் சிதலமடைந்த ... மேலும்
 
temple news
அவிநாசி; மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஆயிரம் கிலோமீட்டர் ஷிவாங்கா பாதயாத்திரை. மஹா சிவராத்திரி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; மாசி மகா சிவராத்திரி விழா யொட்டி இன்று (பிப்., 10) சுவாமி, அம்மன் கெந்தமாதன பர்வதம் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை ரங்கநாதர் திருக்கோயிலில் மகா சுதர்சன ஹோமம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி கோயிலுக்கு தைப்பூசத்தை முன்னிட்டு மாட்டு வண்டியில் வந்து தரிசனம் செய்து பணிக்கம்பட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar