அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே கட்டங்குடியில், சிவானந்த சாமிகள் ஜீவசமாதி கோயில் உள்ளது. புரட்டாசி பாத பெளர்ணமியை முன்னிட்டு 65 வருட குரு பூஜை நடந்தது. சிவானந்தருக்கு 21 வகையான சிறப்பு அ அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அருப்புக்கோட்டையை சுற்றியுள்ள கிராம மக்கள் கலந்து கொண்டனர். நிர்வாகத்தின் சார்பில் கே.கே.எஸ் எஸ்.ஆர்.ஆர். ரமேஷ் அன்னதானத்தை துவக்கி வைத்தார்.