திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஐப்பசி பிரதோஷ வழிபாடு: நந்திய பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23அக் 2026 05:10
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில், ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய நந்திய பகவானுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், இன்று ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷ வழிபாடு நடந்தது. சுவாமி சன்னதியில் உள்ள அதிகார நந்தி, கிளி கோபுரம் எதிரில் உள்ள நந்தியம்பெருமான், ஆயிரங்கால் மண்டப வளாகத்தில் உள்ள பெரிய நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம் மற்றும் பல்வேறு திரவியங்களால் குடம் குடமாய் சிறப்பு அபிஷேகம் நடந்தது. நடந்த சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, அரோகரா கோஷம் எழுப்பி வழிபட்டனர். தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் தங்க ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயக்கர் எழுந்தருளி மூன்றாம் பிரகாரத்தில் வலம் வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். ஏற்பாடுகளை நிர்வாகத்தினர் செய்திருந்தனர். சுக்ரவார பிரதோஷம் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்தது. காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.