கோவில் கருவறையில் மழை நீர் வெளியேற்ற பக்தர்கள் எதிர்பார்ப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23செப் 2021 02:09
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கற்பகபிள்ளையார் கோவில் உள்ளே தேங்கி மழை நீரை அகற்ற, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, ஆலடி பிள்ளையார் கோவில் தெருவில் கற்பகபிள்ளையார் கோவில் உள்ளது.கோவில் உள்பகுதி, சாலை மட்டத்தில் இருந்து 3 அடி பள்ளத்தில் இருப்பதால் கருவறை பள்ளமாக இருக்கிறது. இந்நிலையில் இரு நாட்களாக காஞ்சிபுரத்தில் பெய்து வரும் மழை நீர், கோவில் வளாகத்தை சூழ்ந்துள்ளது.அப்பகுதி பக்தர்கள் கூறியதாவது:ஆலடி பிள்ளையார்கோவில் தெருவில், இரு பிள்ளையார் கோவில்கள் பள்ளத்தில் உள்ளன. சாலை மட்டத்துடன் சமமாக இருந்த கோவில், சாலை சீரமைப்புக்கு பின் பள்ளத்தில் இருக்கிறது.இரு தினங்களாக பெய்த மழை நீர் கோவில் உள்ளே தேங்கியுள்ளதால், பக்தர்கள் உள்ளே செல்ல முடியவில்லை. அர்ச்சகரும் பூஜையும் செய்ய முடியாத நிலை உள்ளது. கோவில் உள்ளே தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றி, பூஜைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.