* உண்மைக்கு தலை வணங்கு. * மனதில் இருந்து ‘தான்’ என்ற அகந்தையை அகற்று. * பிற உயிர்களிடம் இரக்கம் காட்டு. * ஊருக்கு நல்லது செய். * பலன் கருதாமல் பிறருக்கு உதவு. * தொண்டு செய். அதுவே கடவுளுக்கு நீ செய்யும் பணி. * கடவுளுக்கு செய்யும் தொண்டும், குருநாதருக்குச் செய்யும் சேவையும் ஒன்றே. * முன்னோர்கள் கூறிய கருத்தை ஏற்றுக்கொள். * வயிறை வளர்ப்போரிடம் பழகாதே. * பிறரை பற்றி குறைகூறுபவனிடம் பேசாதே. * கடவுளுக்கு நைவேத்யம் செய்த உணவை சாப்பிடு. * புனித நுால்களில் குறிப்பிட்டுள்ள பொருட்களே பிரசாதத்திற்கு ஏற்றவை. * கடவுளின் திருவுள்ளம் மகிழ்ச்சி ஏற்படும்படியாக பணி செய். * நீ பெற்ற இன்பத்தை பிறரும் பெற வேண்டும் என்று நினை. * நீ கற்றுக்கொண்டதை பிறருக்கும் கற்றுக்கொடு. * பிறரது உயர்ந்த லட்சியத்திற்காக உன்னையே தியாகம் செய். * பிறப்பால் யாரையும் ஏளனம் செய்யாதே. * பிறர் வாழ்வில் முன்னேற உதவியாக இரு.