* நீ செய்த தர்மம் உன்னை காக்கும். * நல்ல மனமே கடவுள் வாழும் இடமாகும். * கடவுளை அன்பினால் வணங்கு. * மலர்ந்த முகத்துடன் அனைவரிடமும் பழகுங்கள். * எப்போதும் கடவுளை நினை. * மானம் காக்க ஆடையும், மனதை காக்க வழிபாடும் அவசியம். * உங்களின் செயல் குடும்பத்துக்கும், நாட்டுக்கும் பயன்தர வேண்டும். * பெற்றோரை விட சிறந்தவர் யாருமில்லை. * பெரியவர்களை அலட்சியப்படுத்தாதே. * இப்பிறவியில் செய்யும் நன்மையை மறுபிறப்பில் அனுபவிப்பாய். * நியாயமற்ற வழியில் பணத்தை சேர்க்காதே. * அறிவை மேம்படுத்தும் நல்ல புத்தகங்களை படி. * அனுபவத்தால் கிடைக்கும் அறிவே மேலானது. * பதறாமல் செயல்களை செய். * நல்லவர்களின் கோபம் மோதிரம் கழற்றும் நேரத்திற்குள் மறைந்து விடும். * யோசித்து செயல்படு. * அன்பு, அறிவை செயலால் மட்டுமே உணரமுடியும். * உறவினரையும் நண்பர்களையும் அளக்கும் அளவுகோல் துன்பம். * எல்லாம் தெரிந்தவரும் இல்லை. எதுவுமே தெரியாதவரும் இல்லை.