Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

ரிஷபம் : ஐப்பசி ராசிபலன் ரிஷபம் : ஐப்பசி ராசிபலன் கடகம் : ஐப்பசி ராசிபலன் கடகம் : ஐப்பசி ராசிபலன்
முதல் பக்கம் » கார்த்திகை ராசி பலன் (17.11.2021 முதல் 15.12.2021 வரை)
மிதுனம் : ஐப்பசி ராசிபலன்
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2021
07:56

மிருகசீரிடம் - 3, 4: எடுத்த செயல்களை திட்டமிட்டு செய்யும் மிருகசீரிட நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் வீடு - மனை - வாகனம் சம்பந்தமான காரியங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிட்டும். சனியின் அஷ்டம சஞ்சாரத்தால் காரிய தடை தாமதம் ஏற்படும். எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் இழுபறியாக இருக்கும். ஆனாலும் சனியின் சார சஞ்சாரத்தால் மனமகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும். தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சுணக்க நிலை மாறும். பணவரத்து இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். உங்களுக்கு நற்பெயர் கிடைப்பதில் எந்த இடையூறும் இருக்காது. குடும்பத்தில் இருந்து வந்த மனம் நோகும் படியான சூழ்நிலைகள் மாறும். ஆனாலும் அனைத்து விஷயங்களிலும் நீங்கள் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அரசியல்வாதிகள் எதிர்ப்புகளையும் மீறி முன்னேறுவர். கலைத்துறையினரின் படைப்புத் திறன் வளரும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் முழுமூச்சுடன் ஈடுபடுவீர்கள்.

பரிகாரம்: பவுர்ணமியில் பூஜை செய்து அம்மனை வணங்க எல்லா காரியங்களும் நல்லபடியாக நடக்கும் மனகவலை நீங்கும்.
சந்திராஷ்டம தினம்: நவ 9, 10
அதிர்ஷ்ட தினம்:அக் 24

திருவாதிரை:
எதிலும் நேரிடையாக ஈடுபடாமல் மறைமுகமாக காரியம் சாதித்துக் கொள்ளும் திறமை உடைய திருவாதிரை நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் மனதில் இருந்த கவலை நீங்கி தைரியம் உண்டாகும். நட்சத்திரநாதன் ராகு சஞ்சாரத்தின் மூலம் எதிலும் லாபத்தை பார்க்க முடியும். எல்லா நன்மையும் உண்டாகி உடல் ஆரோக்கியம் பெறும். வாக்கு வன்மையால் எந்த காரியத்தையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். பணவரத்தும் திருப்தியாக இருக்கும். அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்னைகள் அகலும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். கலைத்துறையினருக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். அரசியல் துறையினருக்கு ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்க பாடுபடுவீர்கள்.

பரிகாரம்: அம்மனை தரிசித்து வர காரியத் தடை நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.
சந்திராஷ்டம தினம்: நவ 10, 11
அதிர்ஷ்ட தினம்:அக் 24

புனர்பூசம் - 1, 2, 3:
இனிமையான பேச்சும், குளுமையான பார்வையும் உடைய புனர்பூச நட்சத்திர அன்பர்களே உங்களுக்கு அவ்வப்போது செய்வது சரிதானா என்ற தயக்கம் ஏற்படும். இந்த மாதம் எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து அதிகரிக்கும். அடுத்தவர்களிடம் பொறுப்புக்களை ஒப்படைக்காமல் நேரடியாக செய்வது நன்மை தரும். நட்சத்திரநாதன் குரு சஞ்சாரத்தால் தொழில் வியாபாரம் தொடர்பாக அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். அதற்கேற்ற பலனும் கிடைக்க பெறுவீர்கள். நிலுவையில் உள்ள பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் நிர்வாக திறமை பளிச்சிடும். எதிர்ப்புகள் குறையும். காரியதடை அகலும். எந்திரங்கள் மற்றும் தீ ஆகியவற்றை கையாளும்போது கவனம் தேவை. குடும்பத்தில் திடீர் குழப்பங்கள் தலை தூக்கும். அமைதியாக இருக்க முயன்றாலும் கூட மற்றவர்கள் வலுக்கட்டாயமாக பேசுவார்கள். பெண்களுக்கு எந்த ஒரு வேலையையும் அடுத்தவரை நம்பி ஒப்படைக்காமல் நேரடியாக கவனிப்பது நன்மை தரும். கலைத்துறையினருக்கு ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். அரசியல் துறையினருக்கு அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கலாம். மாணவர்களுக்கு முயற்சிகள் சாதகமான பலன் தரும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். திறமை வெளிப்படும்.

பரிகாரம்: நவக்கிரக குருவை வணங்கி வழிபட எல்லா பிரச்னைகளும் தீரும். தடைகள் நீங்கும்.
சந்திராஷ்டம தினம்: நவ 11, 12
அதிர்ஷ்ட தினம்:அக் 25

 
மேலும் கார்த்திகை ராசி பலன் (17.11.2021 முதல் 15.12.2021 வரை) »
temple
அசுவினி: தீவிர உழைப்பும், அதிக முயற்சிகளுடன் காரியங்களில் ஈடுபடும் அசுவினி நட்சத்திர அன்பர்களே! இந்த ... மேலும்
 
temple
கார்த்திகை - 2, 3 ,4:- சின்ன விஷயங்களுக்கு கூட அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடிய கார்த்திகை நட்சத்திர ... மேலும்
 
temple
மிருகசீரிடம் - 3, 4: அனைவரது கருத்துக்களையும் ஏற்கும் மிருகசீரிட நட்சத்திர அன்பர்களே! இந்த மாதம் துன்பம் ... மேலும்
 
temple
புனர்பூசம் - 4: எந்த பிரச்னைகள் வந்தாலும் எதிர்த்து நின்று சமாளிக்க கூடிய ஆற்றல் பெற்ற புனர்பூச ... மேலும்
 
temple
மகம்: எத்தனை தடைவந்தாலும் எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் பின்வாங்காத மகம் நட்சத்திரம் அன்பர்களே! ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.