Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

மிதுனம் : ஐப்பசி ராசிபலன் மிதுனம் : ஐப்பசி ராசிபலன் சிம்மம் : ஐப்பசி ராசிபலன் சிம்மம் : ஐப்பசி ராசிபலன்
முதல் பக்கம் » கார்த்திகை ராசி பலன் (17.11.2021 முதல் 15.12.2021 வரை)
கடகம் : ஐப்பசி ராசிபலன்
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2021
07:57

புனர்பூசம் - 4: முயற்சிகளில் பின்வாங்காத புனர்பூச நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விருப்பங்கள் கைகூடும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். பெண்களுக்கு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். கட்சித் தலைமையின் அன்புக்கு பாத்திரமாவீர்கள். கலைத்துறையினர் புதுமையான சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பர். படைப்புகளை வெளியிட சில போராட்டங்களை சந்திக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை குறையும். அதிக மதிப்பெண் எடுக்க ஆர்வமாக படிப்பீர்கள்.

பரிகாரம்: பானகம் அர்ப்பணித்து பெருமாளை வணங்க முன் ஜென்ம பாவம் நீங்கும். குடும்பம் சுபிட்சமடையும்.
சந்திராஷ்டம தினம்: நவ 11, 12
அதிர்ஷ்ட தினம்:அக் 26

பூசம்:
எதைக்கண்டும் அஞ்சாமல் நிமிர்ந்து நிற்கும் பூச நட்சத்திர அன்பர்களே தைரியமே உங்கள் பலம். இந்த மாதம் எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். மற்றவர்களுடன் இருந்த விரோதம் மறைந்து நட்பு ஏற்படும். வீண்செலவு குறையும். எதிலும் ஒரு வேகத்தை உண்டாக்கும். நல்லதா? கெட்டதா? என்று யோசிக்க தோன்றாத மனநிலை உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறி வேகம் பிடிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புத்தி சாதூர்யம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். பணி உயர்வு சம்பந்தமான தேர்வுகளில் தேர்ச்சி பெறுவீர்கள். மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். திருமண முயற்சிகள் கைகூடும். வாழ்க்கை துணையால் பணவரத்து இருக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். உறவினர்களுடன் இருந்த மன வருத்தம் நீங்கும். பெண்களுக்கு மற்றவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கி நட்பு உண்டாகும். கலைத்துறையினருக்கு தேவையான பண உதவி கிடைக்கும். அரசியல் துறையினருக்கு உதவிகள் செய்யும்போது ஆலோசித்து செய்வது நல்லது. மாணவர்களுக்கு திறமை வெளிப்படும். சாமர்த்தியமான பேச்சு இருக்கும்.

பரிகாரம்: அருகிலிருக்கும் சிவன் ஆலயத்திற்குச் சென்று வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிலும் வெற்றி கிடைக்கும்.
சந்திராஷ்டம தினம்: நவ 12, 13
அதிர்ஷ்ட தினம்:அக் 27

ஆயில்யம்:
ரகசியங்களை காக்கும் ஆயில்ய நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த பண வரவு கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் சமூகத்தில் அந்தஸ்தும், மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள். தூர தேச பிரயாணங்களுக்கான சூழ்நிலை ஏற்படும். சுப நிகழ்ச்சிகளுக்கள் தங்கு தடையின்றி நடைபெறும். வழக்குகள் உங்களுக்கு சாதகமான நிலையில் இருக்கும். ஆரோக்கியக் குறைபாடு நீங்கும். தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். தொழில் விரிவுபடுத்துவது பற்றிய ஆலோசனை மேற்கொள்வீர்கள். அனுபவப்பூர்வமான அறிவு திறன் கைகொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறமை அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம். தொழில் நிமித்தமாக வெளியூர் அடிக்கடி செல்ல வேண்டி வரலாம். குடும்பத்தில் பிள்ளைகளால் நன்மை உண்டாகும். அவர்களால் சந்தோஷம் கிடைக்கும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு திறம்பட செயல்படுவீர்கள். பெண்கள் உங்களது செயல்களுக்கு மற்றவர்களது ஆதரவு கிடைக்கும். கலைத்துறையினருக்கு எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட தாமதமாகலாம். அரசியல்துறையினருக்கு மனதில் தைரியம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடக்கும்.

பரிகாரம்: விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்து பெருமாளை பூஜிக்க எல்லா தடைகளும் நீங்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.
சந்திராஷ்டம தினம்: அக் 18, நவ 13, 14
அதிர்ஷ்ட தினம்:அக் 28

 
மேலும் கார்த்திகை ராசி பலன் (17.11.2021 முதல் 15.12.2021 வரை) »
temple
அசுவினி: தீவிர உழைப்பும், அதிக முயற்சிகளுடன் காரியங்களில் ஈடுபடும் அசுவினி நட்சத்திர அன்பர்களே! இந்த ... மேலும்
 
temple
கார்த்திகை - 2, 3 ,4:- சின்ன விஷயங்களுக்கு கூட அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடிய கார்த்திகை நட்சத்திர ... மேலும்
 
temple
மிருகசீரிடம் - 3, 4: அனைவரது கருத்துக்களையும் ஏற்கும் மிருகசீரிட நட்சத்திர அன்பர்களே! இந்த மாதம் துன்பம் ... மேலும்
 
temple
புனர்பூசம் - 4: எந்த பிரச்னைகள் வந்தாலும் எதிர்த்து நின்று சமாளிக்க கூடிய ஆற்றல் பெற்ற புனர்பூச ... மேலும்
 
temple
மகம்: எத்தனை தடைவந்தாலும் எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் பின்வாங்காத மகம் நட்சத்திரம் அன்பர்களே! ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.