Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் மாணிக்கநாச்சியம்மன் கோயில் ஐப்பசி விழா: மதுக்குடம் எடுப்பு மாணிக்கநாச்சியம்மன் கோயில் ஐப்பசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தீபாவளியன்று (நவ.4) தங்ககவசத்தில் அருள்பாலிக்கும் மதுரை மீனாட்சி அம்மன்
எழுத்தின் அளவு:
தீபாவளியன்று (நவ.4) தங்ககவசத்தில் அருள்பாலிக்கும் மதுரை மீனாட்சி அம்மன்

பதிவு செய்த நாள்

28 அக்
2021
09:10

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நவ.,4 - 9 வரை கோலாட்ட உற்ஸவம் நடக்கிறது. தீபாவளியன்று அம்மனுக்கு வைரகிரீடமும், தங்ககவசமும், சுவாமிக்கு வைர நெற்றிப்பட்டையும் சாத்துப்படியாகிறது.

அக்.,31 அன்று ஐப்பசி பூரம் நடக்கிறது. அன்று காலை 10:00 மணியளவில் அம்மனுக்கும், உற்ஸவ அம்மனுக்கும் ஏற்றி இறக்குதல் சடங்கு நடக்கிறது. நவ.,4 முதல் 9 வரை கோலாட்ட உற்ஸவ நாட்களில் தினமும் மாலை 6:00 மணியளவில் அம்மன், ஆடி வீதியில் எழுந்தருளி சுற்றி வந்து மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் பக்தியுலாத்தி பின் கொலுச்சாவடி சேத்தியாகும். நவ.,8 மாலை 6:00 மணிக்கு அம்மன் வெள்ளி கோ ரதத்தில் ஆடி வீதிகளில் எழுந்தருளுகிறார். நவ.,9 மாலை 6:00 மணிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்சமூர்த்திகளுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளுகின்றனர்.

கந்தசஷ்டி: இந்த உற்ஸவம் நவ.,4 முதல் 9 வரை நடக்கிறது. நவ.,10 காலை 7:00 மணிக்கு கூடல்குமாரருக்கு வெள்ளிகவசம் சாத்துபடியாகி அபிேஷக அலங்காரம், சண்முகார்ச்சனை நடக்கும். நவ., 4 முதல் 10 வரை உபயதாரர் சார்பில் உபய திருக்கல்யாணம், தங்கரதம் உலா கிடையாது. ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணைகமிஷனர் செல்லத்துரை செய்து வருகின்றனர்.

உண்டியல் திறப்பு: இக்கோயில் மற்றும் உபகோயில்களின் உண்டியல் நேற்று எண்ணப்பட்டன. ரொக்கமாக மொத்தம் ரூ.54 லட்சத்து 38 ஆயிரத்து 266, தங்கம் 323 கிராம், வெள்ளி 815 கிராம், 34 வெளிநாட்டு நோட்டுகள் கிடைக்க பெற்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி, விநாயகருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கூரம்: கூரம் கிராமத்தில் உள்ள கூரத்தாழ்வான் கோவிலில் இன்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
விருதுநகர்; திருச்சுழி அருகே ஸ்ரீ ராமதேவர் சித்தர் பீடத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
கோவை;  காரமடை அருகேயுள்ள படியனூர் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த அருள்மிகு பழநி ஆண்டவர் ... மேலும்
 
temple news
கம்பம்; காமயகவுண்டன்பட்டி ஸ்ரீ சுபத்ரா காளியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி ஆயிரத்தெட்டு விளக்கு பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar