திருப்பரங்குன்றம் கோயிலில் நந்திக்கு அபிஷேகம், பூஜை, தீபாராதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03நவ 2021 04:11
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு கம்பத்தடி மண்டபத்திலுள்ள பெரிய நந்திக்கு அபிஷேகம், பூஜை, தீபாராதனை நடந்தது.திருநகர் சித்தி விநாயகர் கோயில் காசி விஸ்வநாதர், தென்பரங்குன்றம் பால்சுனை கண்ட சிவபெருமான், மலைமேலுள்ள காசி விஸ்வநாதர், சன்னதி தெரு சொக்கநாதர் கோயில், மலை அடிவாரம் பழநி ஆண்டவர் கோயில், கோயில் வளாகத்திலுள்ள பசுபதீஸ்வரர் கோயில், பாண்டியன் நகர் கல்யாண விநாயகர் கோயில், கல்களம் ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், விளாச்சேரி ஈஸ்வரன் கோயில்களில் பிரதோஷ பூஜை நடந்தது.