பதிவு செய்த நாள்
08
நவ
2021
06:11
தினமும் உச்சிக்கால பூஜை முடிந்த பின் ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக்கொண்டு மேள தாளத்துடன் சென்று கடலில் கரைக்கின்றனர். இதனை, ‘கங்கை பூஜை’ என்கின்றனர். இங்குள்ள சரவணப்பொய்கையில் ஆறு தாமரை மலர்களில் முருகன் ஆறு குழந்தைகளாக தவழ நடுவே கார்த்திகைப்பெண்கள் இருக்கும் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. .......
விதவிதமான நைவேத்தியம்
திருச்செந்துாரில் முருகனுக்கு தினமும் 9 கால பூஜை நடக்கிறது. அப்போது சிறுபருப்பு பொங்கல், கஞ்சி, தோசை, அப்பம், நெய் சாதம், ஊறுகாய், சர்க்கரை கலந்த பொரி, அதிரசம், தேன்குழல், அப்பம், வேக வைத்த பாசிப்பருப்பு, வெல்லம் கலந்த உருண்டை என விதவிதமான நைவேத்தியங்கள் படைக்கப்படுகின்றன.