கண்டவராயன்பட்டி: திருப்புத்துார் அருகே கண்டவரயன்பட்டி தண்டாயுதபாணி கோயிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு லட்ச்சார்ச்சனை நடந்தது.
நேற்று காலை 7:00 மணிக்கு கந்தசஷ்டியை முன்னிட்டு வலம்புரி விநாயகர் மற்றும் தண்டாயுதபாணி மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து சிவாச்சார்யார்களால் லட்சார்ச்சனை துவங்கியது. மாலை 6:00 மணிக்கு லட்ச்சார்ச்சனை நிறைவு பெற்றது. பின்னர் மூலவர் தண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தன. சர்வ அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாட்டினை நடப்புக்காரியக்காரர் சுப்பிரமணியன் மற்றும் தெ.சி.நா. குடும்பத்தினர் செய்தனர்.