மதுரை : மதுரை ஆதின மடம் சார்பில் தபால்தந்தி நகர் பார்க் டவுன் 6வது தெருவில் தமிழாகரன் தேவார பாடசாலை துவங்கப்பட்டது. ஆதினம் ஹரிகர ஞானசம்பந்த தேசிக பராமச்சாரிய சுவாமிகள் தலைமை வகித்தார்.பத்து வயதிற்கு மேற்பட்டவர்கள் இங்கு இலவசமாக தேவார திருமுறைகளை கற்கலாம். திருவிடைமருதுார் நடராஜன் கற்றுத்தர உள்ளார்.