Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இருக்கன் குடி மாரியம்மன் கோவிலில் ... திருத்தணி கோவிலில் உற்சவருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடலைக்காய் திருவிழாவரும் 29ல் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 நவ
2021
04:11

பசவனகுடி: பெங்களூரு பசவனகுடியில் நடக்கும், வரலாற்று பிரசித்தி பெற்ற கடலைக்காய் திருவிழாவுக்கு மாநகராட்சி அனுமதியளித்துள்ளது. வரும் 29 முதல் மூன்று நாட்கள் இந்த திருவிழா நடக்கிறது.ஆண்டு தோறும் கன்னட கார்த்திகை மாதத்தின் கடைசி திங்கட் கிழமை பெங்களூரு பசவனகுடியின், புல் டெம்பிள் சாலையில், தொட்ட கணபதி கோவில் வளாகத்தில், கடலைக்காய் திருவிழா நடப்பது வழக்கம். இந்த திருவிழாவுக்கு, 500 ஆண்டு வரலாறு உள்ளது. கர்நாடகாவின் பல்வேறு பகுதிகள், தமிழகம், ஆந்திரா என வெளி மாநிலங்களின் விவசாயிகள், வியாபாரிகள் பங்கேற்பர். லட்சக்கணக்கான மக்கள் வருவர்.கொரோனா காரணமாக கடந்த ஆண்டில் கோவிலுக்குள் மட்டும் நடத்தப்பட்டது. இம்முறை கொரோனா கட்டுக்குள் வந்துள்ளதால், வரும் 29 முதல், மூன்று நாட்கள் திருவிழா நடத்த, பெங்களூரு மாநகராட்சி அனுமதியளித்துள்ளது.இரண்டு நாட்களுக்கு முன்பே கடைகள் திறக்கப்படும். பல்வேறு வகையான கடலைக்காய்கள் இதில் இடம் பெறும்.தொட்ட கணபதி சாலையிலிருந்து ராமகிருஷ்ணா ஆஸ்ரமம் சதுக்கம் வரை கடைகள் திறந்திருக்கும். மார்க்கெட் விலையை விட குறைந்த விலைக்கு வாங்கலாம். கொரோனா முன்னெச்சரிக்கையுடன் நடத்தப்படும். தொட்ட கணபதி கோவில், சாலைகளின் இரண்டு ஓரங்களிலும், மின் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கிருஷ்ணர் நரகாசுரனை அழித்த தினமே தீப ஒளி திருநாளாம் தீபாவளி திருநாள். சிவபெருமான் உலகிலுள்ள நீர்நிலை ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளி பண்டிகையை ஒட்டி உத்தரபிரதேசம் அயோத்தியில் ஆண்டுதோறும் தீபத்திருவிழா நடத்தப்படுவது ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயிலில், நவம்பர் 7-ம் தேதியான ... மேலும்
 
temple news
‘‘ஜகத்குரு சங்கராசார்ய ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த சுவாமிகளை, தீபாவளி நன்னாளில் இடைவிடாது தியானிப்பதன் ... மேலும்
 
temple news
கோவை: ‘‘தீபாவளி திருநாளில் தீய எண்ணங்களை நீக்கி நல்ல எண்ணங்களை வளர்ப்போம்,’’ என, கோவை காமாட்சிபுரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar