இருக்கன் குடி மாரியம்மன் கோவிலில் உண்டியல்கள் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11நவ 2021 04:11
சாத்துார்: இருக்கன் குடிமாரியம்மன் கோவிலில் நேற்று உண்டியல்கள. திறக்கப்பட்டு காணிக்கை பொருட்கள் கணக்கிடப்பட்டன.
விருதுநகர் இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கணேசன், கோவில் உதவி ஆணையர் கருணாகரன், மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் ராமமூர்த்தி பூஜாரி, சவுந்திரராஜன் பூஜாரி, மற்றும் அறங்காவலர் குழு முன்னிலையில் 11 உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை பொருட்கள் கணக்கிடப்பட்டன. கோவில் அலுவலர்கள், ஓம் சக்தி வார வழிபாட்டு குழுவினர், ஐயப்பா சேவா சங்கத்தினர் காணிக்கை பொருட்களை கணக்கிட்டனர். ரொக்கமாக ரூ29 லட்சத்தி 21 ஆயிரத்தி 232 ம், தங்கம் 190 கிராம், வெள்ளி 430 கிராம் காணிக்கையாக உண்டியலில் பக்தர்கள் செலுத்தியிருந்தனர். காணிக்கை பொருட்கள் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.