தர்மபுரி: தர்மபுரி அடுத்த மூக்கம்பட்டி ஊப்பாரஹள்ளி செல்வவிநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று காலை, 9:00 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி நேற்று காலை, 7:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து விநாயகர், முருகர், விஷ்ணு, தட்சிணாமூர்த்தி சுவாமி சிலைகள் ஊர்வலமும், பால்குட ஊர்வலமும் நடந்தது.